Khushbu about Weight Loss
Khushbu web

"குஷ்பூ வெயிட் ஏத்திகிட்டே போறா"னு கமெண்ட் அடிச்சாங்க - உடல் எடை குறைத்தது பற்றி குஷ்பூ!

நடுவில் மிகவும் எடை கூடிவிட்டேன், அண்ணாத்த படம் நடிக்கும் போதெல்லாம் 98 கிலோ இருந்தேன், இன்னும் 2 கிலோ ஏறியிருந்தால் 100 கிலோ ஆகியிருப்பேன்.
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. இப்போது அரசியலில் தீவிரமாக இயங்கிவருவதால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இவர் உடல் எடை குறைத்த புகைப்படங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் உடல் எடை குறைத்தது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

Khushbu
Khushbu

அந்தப் பேட்டியில் "வயது ரீதியாக பார்த்தால் இது மிகவும் தேவையானதாக இருந்தது. எனக்கு 55 வயது ஆகிவிட்டது, இப்போது வரை பிபி, சுகர் எதுவும் கிடையாது. இது வந்தால் பெரிய ஆபத்து. ஏற்கெனவே குடும்ப சொத்து மாதிரி Migraine, Sinus கொடுத்திவிட்டார்கள். இதற்கு மேல் வேறு எதுவும் வேண்டாம். நான் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபர். நடுவில் மிகவும் எடை கூடிவிட்டேன்,  அண்ணாத்த படம் நடிக்கும் போதெல்லாம் 98 கிலோ இருந்தேன், இன்னும் 2 கிலோ ஏறியிருந்தால் 100 கிலோ ஆகியிருப்பேன். வீடு பெரிய வீடு, மேலே, கீழே போகும்போது முட்டி வலி, மூச்சுவாங்குவது இதை எல்லாம் கவனித்தேன்.

Khushbu about Weight Loss
`பாகுபலி'யில் நான் அந்தக் காட்சி நடிக்க காரணம் சிவாஜி சார்! - சத்யராஜ் சொன்ன சுவாரஸ்யம் | Baahubali

என் முகம் பார்க்க எனக்கே ஒரு மாதிரி இருந்தது. என்னடா முகம் யானை மாதிரி இருக்கிறது என தோன்றியது. என் மருத்துவரும், உனக்கு மூட்டுவலி போகவேண்டும், பிபி, சுகர் வரக்கூடாது என்றால் எடையை குறைக்க வேண்டும் என சொன்னார். எனவே நான் கோவிட் சமயத்தில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க ஆரம்பித்துவிட்டேன். ஆரோக்யமாக இருப்பதுதான் முக்கியம்.

நான் வரும் போது ஒல்லியாக தான் வந்தேன். அப்போது ஏற்றுக் கொண்டார்கள். குண்டானேன் அப்போதும் ஏற்றுக் கொண்டார்கள். இப்போது மீண்டும் இளைத்திருக்கிறேன். இதையும் ஏற்பார்கள். எனக்கு இன்னும் நினைவிருக்கிறது சின்னத்தம்பி படத்துக்கு பின் `சிங்காரவேலன்', `உத்தமராசா' போன்ற படங்கள் செய்த போது `குஷ்பூ வெயிட் ஏத்திகிட்டே போறா, எங்க போய் நிறுத்த போறான்னு தெரியல. ஹீரோயினுக்கு இது சரியில்ல' என்ற கமெண்ட் எல்லாம் கூட வந்தது. பட விமர்சனங்களில் கூட அவற்றை எழுதுவார்கள். இவ்வளவு காலம் பார்த்து பழகிய மக்களுக்கு, நான் எடை குறைந்தது அதிர்ச்சியாக கூட இருக்கலாம். அதனால் அவர்கள் பேசுகிறார்கள்." என்றார்.

Khushbu about Weight Loss
’CBI விசாரணைக்கு பயந்து..’ விஜய்க்கு இயக்குநர் அமீர் எச்சரிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com