`ஜெயிலர் 2' இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ரஜினி - ஷாரூக்? | Jailer 2 | Rajinikanth | Shah Rukh Khan
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் படம் `ஜெயிலர் 2'. ரஜினி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ளது இந்தப் படம் தான் என்பதால் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் ரஜினி உடன் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். சிறப்புத் தோற்றங்களில் சிவராஜ் குமார், மோகன்லால், வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, மிதுன் சக்ரவர்த்தி, விஜய் சேதுபதி, அன்னா ராஜன் எனப் பலரும் நடிப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தில் ஷாரூக்கான் நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பே ரஜினி - ஷாரூக் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் எனச் சொல்லப்பட்டது. இப்போது கிடைத்துள்ள தகவல்படி அந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே விதவிதமான கார்களை நசுக்கி, உடைக்கும் பெரிய மிஷன்கள் கொண்ட பிரமாண்ட பேக்டரி சண்டிகரில் இருக்கிறது. அங்கேதான் 'ஜெயிலர் 2' படத்துக்காக ரஜினி & ஷாருக்கான் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட காட்சிகளைப் படம் பிடிக்கிறாராம், நெல்சன். முதன்முதலாக ரஜினி & ஷாருக்கான் இணைந்து நடிக்கிறார்கள் என்பதால் மிகப்பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என கடுமையாக உழைத்து எடுக்கிறாராம்.

