கோலிவுட் செய்திகள்
தலைக்கேறிய லியோ வெறி.. சிதறுதேங்காயால் பதறவிட்ட ரசிகர்கள்.. அவதியடைந்த பொதுமக்கள்!
கோவையில் திரையரங்கு ஒன்றின் முன் விஜய் ரசிகர்கள் சாலையில் தேங்காயை உடைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியானது. விஜய் ரசிகர்கள் காலை முதல் தியேட்டர் வாசலில் குவிந்து திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதிலும் பெரும்பான்மையான தியேட்டர்கள் ஆட்டம், பாட்டம் என களைகட்டின.

இந்நிலையில் கோவையில் திரையரங்கு ஒன்றின் முன் விஜய் ரசிகர்கள் சாலையில் தேங்காயை உடைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால் சாலையில் சென்ற பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ரசிகர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த தேங்காய்களை முழுமையாக உடைக்கும்வரை மக்கள் காத்திருக்கும்படி நேரிட்டது. அதில் ஆம்புலன்ஸ் ஒன்றும் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.