எப்படி இருக்கிறது லியோ? படம்பார்த்த ரசிகர்கள் சொல்வதென்ன?
ஆந்திராவில் பெயர் பிரச்னை காரணமாக லியோ தெலுங்கு பதிப்பை வெளியிட நாளை வரை ஹைதராபாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் திருப்பதி, சித்தூர், நகரி, புத்தூர், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் இன்று காலை 5 மணிக்கு லியோ திரைப்படத்தின் தமிழ் பதிப்பு வெளியானது.
அதனை காண தமிழகத்திலிருந்து ஏராளமான ரசிகர்கள் கூட்டமாக சென்று திரையரங்குகளிலே இரவு முதல் காத்திருந்து படம் பார்த்தனர். பல இடங்களில் அதிகாலை 4 மணிக்கே முதல்காட்சியாக வெளியிடப்பட்டது. தமிழகத்தில் காலை 9 மணிக்குதான் லியோ திரைப்படம் வெளியானது.
கேரளாவில் அதிகாலை மூன்றரை மணிக்கே படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. அதனால், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பல இளைஞர்கள் கேரளாவிலுள்ள திரையரங்குகளில் குவிந்தனர். முதல் காட்சி முடிந்து, 2ஆவது காட்சிக்கும் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
படத்தை கண்டு களித்த பின் ரசிகர்கள் கூறிய கருத்துகளை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் காணலாம்.