\
Prime Minister Modi Condolences for Bharathiraaja's Demise
BharathirajaModi

"பாரதிராஜா இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு" - பிரதமர் மோடி ஆறுதல் | Modi | Bharathiraja

தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாகத் தனது படைப்புகளால் ரசிகர்களின் மனதை வென்ற ஒரு சிறந்த திரைப்படப் படைப்பாளி அவர்.
Published on

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் முக்கியமானவர் பாரதிராஜா. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் 10ஆம் தேதி இயற்கை எய்தினார். இவரது மறைவு திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது. பாரதிராஜாவின் சொந்த ஊரிலேயே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி அவரது மறைவுக்கு ஆறுதல் சொல்லி அவரின் மனைவிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், "பாரதிராஜாவின் மறைவுச் செய்தியை மிகுந்த துயரத்துடனும் வருத்தத்துடனும் அறிந்துகொண்டேன். அவரது மறைவு, வார்த்தைகளால் விவரிக்க முடியாத, ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாகத் தனது படைப்புகளால் ரசிகர்களின் மனதை வென்ற ஒரு சிறந்த திரைப்படப் படைப்பாளி அவர். கிராமத்து வாழ்க்கையை எதார்த்தமாகச் சித்தரித்ததே அவரது திரைப்படங்களின் மிகக் குறிப்பிடத்தக்க அம்சமாகத் திகழ்ந்தது. கலை உலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் அன்புடன் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரை நேசிப்பவர்கள் அவரை மிகவும் இழந்து தவிப்பார்கள்; இருப்பினும், அவரது நினைவுகள் என்றும் நம் இதயங்களில் நிலைத்திருக்கும். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக் கடும் துயரத்தைத் தாங்கிக்கொள்ளும் வலிமையையும் மன உறுதியையும் அவரது குடும்பத்தினர் பெற வேண்டுகிறேன். ஓம் சாந்தி!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Prime Minister Modi Condolences for Bharathiraaja's Demise
"தீனா படத்தை ட்ராப் செய்ய நினைத்தேன்..." - ஏ ஆர் முருகதாஸ்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com