Actress Prathyusha
Actress PrathyushaCase

விஜயகாந்த் பட நடிகைக்கு நேர்ந்த சோகம்... 24 வருடங்களுக்கு பிறகு வந்த தீர்ப்பு! | Prathyusha

அவர் மரணத்தை விட, அவரின் மரணத்தில் இருந்த மர்மம் தந்த அதிர்ச்சி பல ஆண்டுகளாக நீடித்து வந்தது.
Published on
Summary

நடிகை பிரதியுஷாவின் மரண வழக்கில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சித்தார்த் ரெட்டி தற்கொலைக்கு தூண்டியதாக குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. அவரது மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜாமீனில் உள்ள சித்தார்த், நான்கு வாரங்களில் காவல் நிலையத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

`ராயுடு' என்ற தெலுங்குப் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரதியுஷா. தமிழில் முரளி நடிப்பில் தம்பிராமையா இயக்கத்தில் உருவான `மனுநீதி' படம் மூலம் அறிமுகமானவர், பிரபுவுடன் `சூப்பர் குடும்பம்', விஜயகாந்த்துடன் `தவசி', சத்யராஜுடன் `சவுண்டு பார்ட்டி', ராமராஜனுடன் `பொன்னான நேரம்', பாரதிராஜாவின் `கடல்பூக்கள்' ஆகிய படங்களில் நடித்தார். 18 வயதில் நடிக்க வந்தவர் சில வருடங்களிலேயே  தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பரபரப்பான நடிகையானார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் 21 வயதிலேயே மரணமடைந்த செய்தி பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

அவர் மரணத்தை விட, அவரின் மரணத்தில் இருந்த மர்மம் தந்த அதிர்ச்சி பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. நடிகை பிரதியுஷாவும், சித்தார்த் ரெட்டியும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால், சித்தார்த் வீட்டில் இவர்களது காதலுக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. எனவே 2002 பிப்ரவரி 22ம் தேதி பூச்சிக் கொல்லி மருந்தை இருவரும் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றனர். இதில் சித்தார்த் மட்டும் உயிர் பிழைத்துக் கொண்டார். பிரதியுஷா உயிரிழந்தார்.

Manu Needhi
Manu Needhi
Actress Prathyusha
"குடிப்பழக்கம், ஸ்டீராய்டு, மகளின் பிரிவு...Kennedy" - மீண்டு வந்த அனுராக் காஷ்யப் | Anurag Kashyap

பிர​தி​யுஷா​வின் தாய் சரோஜினி தேவி, இது வெறும் தற்கொலை அல்ல; கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை எனவும் அரசி​யல் செல்வாக்கு உள்​ளவர்​கள் இதற்​குப் பின்னால் இருப்​ப​தாக​வும் குற்றம் சாட்​டி​யிருந்​தார். இந்தச் சம்​பவத்​தில் பிர​தி​யுஷாவை தற்கொலைக்​குத் தூண்டியதாக சித்தார்த் ரெட்டி மீது போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்​தனர். இவ்​வழக்கை விசா​ரித்த சிபிஐ, சித்தார்த் ரெட்டி மீது குற்​றப் பத்​திரிகை தாக்​கல் செய்தது. அதனடிப்​படை​யில், கடந்த 2004-ம் ஆண்​டில் சித்​தார்த் ரெட்டிக்கு 5 ஆண்டு சிறைத் தண்​டனையை ஹைத​ரா​பாத் முதன்மை அமர்வு நீதி​மன்​றம் விதித்​தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சித்தார் 2011-ம் ஆண்டு மேல்முறையீடு செய்ய, அவரின் தண்டனையை உயர்​நீ​தி​மன்​றம் 2 ஆண்​டு​களாகக் குறைத்​ததுடன் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்​தது. ஆனாலும் தன் தண்டனை காலத்தை குறைக்க கோரி சித்தார்த் மீண்டும் மேல்முறையீடு செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதியுஷாவின் தாய், 2012 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தை நாடினார். 14 ஆண்டு விசாரணைக்​குப் பிறகு உயர் நீதி​மன்​றத் தீர்ப்​பை, உச்ச நீதி​மன்​றம் உறுதி செய்​துள்​ளது.

Prathyusha
Prathyusha
Actress Prathyusha
எப்ஸ்டீன் ஃபைல்ஸ்| ’கடவுள் கற்பனை, அழகான பெண்கள் நிஜம்..’ சிக்கிய இந்தியர்? - சின்மயி போட்ட பதிவு!

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. பிரதியுஷா கழுத்து நெடுக்கப்பட்டதாகவோ, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவோ ஆதாரங்கள் இல்லை. இது விஷம் குடித்ததால் ஏற்பட்ட மரணம் என்பது மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக அவரது தாய் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். அதே நேரத்தில் தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் சித்தார்த் ரெட்டியே குற்றவாளி என உறுதி செய்யப்படுகிறது. எனவே அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். ஜாமீனில் உள்ள சித்தார்த் ரெட்டி இன்னும் நான்கு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் சரணடைய வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நடிகை பிரதியுஷா இறந்து 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தீர்ப்பு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Prathyusha
"ஆமாம், இந்த முறை நான் பேச வேண்டியிருந்தது" - சர்ச்சைக்கு பதில் அளித்த அனஸ்வரா | Anaswara Rajan

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com