\
Prashanth Neel's Dragon Glimpse Out Now
NTR JrDragon

பிரஷாந்த் நீல் - ஜூனியர் என் டி ஆரின் 'Dragon' கதை இதுதான்! | Prashanth Neel | NTR Jr

இன்று ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தப் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படத்திற்கு 'டிராகன்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், மேலும் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
Published on

`உக்ரம்', `KGF: Chapter 1', `KGF: Chapter 2', `Salaar: Part 1 – Ceasefire' படங்கள் இயக்கி முன்னணி இயக்குநராக கவனம் ஈர்த்திருப்பவர் பிரஷாந்த் நீல். இதனையடுத்து பிரஷாந்த் இயக்கும் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

இன்று ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தப் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படத்திற்கு 'டிராகன்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், மேலும் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இப்படத்தின் உலகத்தை அறிமுகம் செய்யும் நான்கரை நிமிட வீடியோ இடம்பெற்றுள்ளது. 1967ஆம் ஆண்டில் ஆப்கான் டிரேடிங் கம்பெனி மற்றும் கோல்டன் டிரேடிங் கம்பெனி ஆகிய இரண்டு குழுக்களால் நடத்தப்பட்ட போதைப்பொருள் வர்த்தகப் போரை மையப்படுத்தியதாக உருவாகி இருக்கிறது கதை. ருக்மினி வசந்த், அனில் கபூர், பிஜு மேனன், குஷ்பு சுந்தர், குரு சோமசுந்தரம், ராஜீவ் கனகலா, அசுதோஷ் ராணா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் ஜூன் 11, 2027 அன்று வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Prashanth Neel's Dragon Glimpse Out Now
” `ஹபீபி' பெரிய பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது!” - பா இரஞ்சித் | Pa Ranjith | Habeebi
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com