\
PR Show
PR ShowPradeep Ranganathan

ஒரு படம், ஆறு இயக்குநர்கள்... தயாரிப்பாளரான பிரதீப் ரங்கநாதன்! | Pradeep Ranganathan

மமீதா பைஜு கதையின் நாயகியாக நடிக்கும் #PRS01 படத்தின் அறிமுக காணொளி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
Published on

தமிழ் சினிமாவில் `கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி `லவ் டுடே' மூலம் ஹீரோவாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிகராக பணியாற்றிய முதல் மூன்று படங்களும் ஹாட்ரிக் பிளாக் பஸ்டர் ஹிட். தமிழ் சினிமாவின் நவீன ஆளுமையாக வளர்ந்துள்ள பிரதீப் ரங்கநாதன் இப்போது தயாரிப்பாளராக களம் இறங்குகிறார்.

மமீதா பைஜு கதையின் நாயகியாக நடிக்கும் #PRS01 படத்தின் அறிமுக காணொளி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் அஸ்வத் மாரிமுத்து, சுவாசிகா, சிவாஜி சொன்டினேனி, அனாமிகா மகி, லிசி ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிரதீப் ரங்கநாதனிடம் பணியாற்றிய விஷால், யஷ், நவீன், சாணக்யன், தனுஷ், இளம்பரிதி ஆகிய ஆறு  உதவியாளர்கள் முதல் முறையாக ஒன்றாக இணைந்து -  தி ஆல்ஃபா யூனிட் என்ற பெயரில் இப்படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். சாய் அபயங்கர் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ராகவ் மேற்கொள்கிறார். கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி வரும் இந்த திரைப்படத்தை பி ஆர் ஷோ நிறுவனம் சார்பில் தயாரிப்பதோடு படத்தின் கதையையும் எழுதி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.  தமிழ்- தெலுங்கு -மலையாளம் -ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தின் அறிமுக காணொளி இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. 

PR Show
"தெறி, மெர்சல், பிகில் படங்கள் பற்றி பேசுகிறார்கள்; ஆனால்.." - ஏக்கத்தைப் பகிர்ந்த அட்லீ | Atlee
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com