ஆஸ்கர் ஸ்கிரிப்ட் நூலகத்தில் ‘பார்க்கிங்’ திரைப்படம்!
ஆஸ்கர் ஸ்கிரிப்ட் நூலகத்தில் ‘பார்க்கிங்’ திரைப்படம்!@iamharishkalyan

ஆஸ்கர் ஸ்கிரிப்ட் நூலகத்தில் ‘பார்க்கிங்’ திரைப்படம்!

ஆஸ்கர் ஸ்கிரிப்ட் நூலகத்தில் பார்க்கிங் படத்தின் திரைக்கதையை வைக்க அழைப்பு வந்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Published on

ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா, ரமா ஆகியோரின் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான தமிழ் திரைப்படம் பார்க்கிங். ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான இப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இத்திரைப்படம் 4 இந்திய மொழிகளிலும், 1 சர்வதேச மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், ஆஸ்கர் ஸ்கிரிப்ட் நூலகத்தில் பார்க்கிங் படத்தின் திரைக்கதையை வைக்க அழைப்பு வந்துள்ளது.

ஆஸ்கர் ஸ்கிரிப்ட் நூலகத்தில் ‘பார்க்கிங்’ திரைப்படம்!
அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டதா ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல்; படக்குழுவினர் சொல்வதென்ன?

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹரிஷ் கல்யாண்,

"உங்கள் இதயத்திலிருந்து, ஆஸ்கர் லைப்ரரிக்கு!

ஒரு நல்ல கதை அதற்கான இடத்தை தானே தேடிப் போகும். நம்ப முடியாத இந்தத் தருணத்திற்காக பார்க்கிங் குழுவினருக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com