Now I understand why actors say social media is not  grate says Kayadu
Kayadu LoharTrolls

"எனக்கே அது நிகழும் போதுதான்.." - கயாடு லோஹர் | Kayadu Lohar

ஒருவரோடு நான் மிக சகஜமாக உணரும் போது ஒரு குழந்தையை போல மனதில் இருப்பதை சொல்லிவிடுவேன். ஆனால் இப்போது அதில் நான் கவனம் செலுத்துகிறேன்.
Published on

கயாடு லோஹர் பள்ளிச்சட்டம்பி படத்தில் டொவினோ தாமஸ் உடன் இணைந்து நடித்துள்ளார். இது தொடர்பான பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். டிராகன் வெளியீட்டு சமயத்தில் அவர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஷ்வத் உடன் இணைந்து அளித்த பேட்டி பேட்டி வைரலானது. ஆனால் அந்தப் பேட்டி திட்டமிடப்பட்டு பேசியது என தெரிவித்திருந்தார். அதை பற்றி விவரிக்கும்படி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன கயாடு "அதில் நடந்த மொத்த விஷயமும் முன்பே திட்டமிடப்பட்டவை. அதற்கு பின் இருந்த காரணம் என்ன என்றால், நாங்கள் அப்போது கொடுத்த பேட்டிகளின் போது என்னிடம் கேள்விகள் கேட்டகப்படவே இல்லை. அவர்களுக்கு என்னுடைய பணிகள் குறித்து தெரிந்திருக்கவில்லை என்பது புரிகிறது, அதை நான் குறை சொல்லவில்லை. ஆனால் எவ்வளவு நேரம் பேட்டியில் சும்மா அமர்ந்திருப்பது. அது எனக்கு வருத்தமாக இருந்தது. நான் நன்றாக அலங்கரித்துக் கொண்டு பேட்டி முழுக்க சும்மா அமர்ந்திருக்கிறேன் என படக்குழுவிடம் பேசினேன். 

Dragon
DragonPt web

உங்கள் பங்களிப்பும் அந்தப் பேட்டியில் இருக்கும்படி நாங்கள் ஏதாவது செய்கிறோம் என்றார்கள். அப்படித்தான் என்னை அந்தப் பேட்டியில் இணைத்தார்கள். அது சர்ச்சையாகிவிட்டது. ஆனால் அது முழுக்க திட்டமிடப்பட்டவையே. மக்கள் அவர்களுக்கான PR வேலைகளை செய்வது மிக சாதாரணமான ஒன்று. என்னுடைய நோக்கம் என்பது இதனை ஒரு ஜாலியான விதத்தில் கொண்டு செல்வது மட்டுமே. அதுவரை எல்லோரும் என்னை கொண்டாடினார்கள், நல்ல விஷயங்களை பேசினார்கள். ஆனால் இப்படியான விஷயங்கள் வந்ததும் வேறு விதமாக பேச ஆரம்பித்தார்கள்.

Now I understand why actors say social media is not  grate says Kayadu
"ஜனநாயகனில் உள்ள FOR EDIT REFF-க்கு இதுவே அர்த்தம்.." பிரச்னையை விளக்கிய SIFEA கோபி | Vijay

நான் எந்த தவறான விஷயமும் செய்யவில்லையே என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. நான் டிராகன் படத்தை விளம்பரப்படுத்த தான் முயற்சித்தேன். பின்னர் தான் நீங்கள் சொல்லும் ஒரு விஷயம் நீங்கள் சொல்லும் விதத்திலேயே புரிந்து கொள்ளப்படுவதில்லை என்ற பாடத்தை புரிந்து கொண்டேன். எனவே இப்போதெல்லாம் என்ன பேசுகிறோம் என்ற கவனத்தை மனதில் வைத்துக் கொண்டு தான் பேசுகிறேன். 

Now I understand why actors say social media is not  grate says Kayadu
Kayadu LoharTrolls

ஒருவரோடு நான் மிக சகஜமாக உணரும் போது ஒரு குழந்தையை போல மனதில் இருப்பதை சொல்லிவிடுவேன். ஆனால் இப்போது அதில் நான் கவனம் செலுத்துகிறேன். ஏதாவது சொன்னால் அது உடனடியாக சமூக வலைதளங்களில் பரவுகிறது. நானும் அவற்றை கவனித்துக் கொண்டு இருக்கிறேன். இதற்கு முன் சில பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் மோசமான இடமாக இருக்கிறது என சொல்லும் போது பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்கே அது நிகழும் போது தான் என்ன என்று புரிகிறது. நானும் அந்த கமெண்ட் மீம் எதையும் பார்க்க கூடாது என முயல்கிறேன்; முடியவில்லை. அது ஒரு தீய பழக்கம். விரைவில் அந்த நிலையை அடைவேன் என நினைக்கிறேன்." என்றார்.

Now I understand why actors say social media is not  grate says Kayadu
தமிழ் புத்தாண்டில் மகளுக்கு பெயர் சூட்டிய ஹரீஷ் கல்யாண்! | Harish Kalyan

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com