\
Harish Kalyan
Harish KalyanBaby

தமிழ் புத்தாண்டில் மகளுக்கு பெயர் சூட்டிய ஹரீஷ் கல்யாண்! | Harish Kalyan

மார்ச் 2ம் தேதி இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ``என் அன்பான குடும்பத்தினர் அனைவருடனும் மிக அற்புதமான செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" எனக் குறிப்பிட்டு தனக்கு மகள் பிறந்த செய்தியை அறிவித்தார்.
Published on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்தார். அவர் நடித்த `ப்யார் பிரேமா காதல்' படம் பெரிய ஹிட்டானது, அதன் பின்பு `பார்க்கிங்', `லப்பர் பந்து' போன்றப் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றார்.

ஹரிஷ் கல்யாண் கடந்த 2022-ம் ஆண்டு நர்மதா உதயகுமாரை திருமணம் செய்துகொண்டார். மார்ச் 2ம் தேதி இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ``என் அன்பான குடும்பத்தினர் அனைவருடனும் மிக அற்புதமான செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" எனக் குறிப்பிட்டு தனக்கு மகள் பிறந்த செய்தியை அறிவித்தார்.

Harish Kalyan
"அந்த பயணம் முடிந்து வந்ததும் செய்த முதல் விஷயம்..." - மஞ்சு வாரியர் | Manju Warrier | Ajith

இன்று தமிழ்புத்தாண்டை முன்னிட்டு தங்கள் மகளுக்கு கிரியா ஹரிஷ் எனப் பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளனர். தங்கள் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Harish Kalyan
கோலிவுடில் சிவராஜ்குமார்... கெஸ்ட் ரோல் இல்லை ஹீரோ! | Shiva Rajkumar
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com