"நயன்தாரா என்னுடைய ரோல் மாடல்!" - ஸ்ரீலீலா | Sreeleela | Nayathara
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி இப்போது தமிழ், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் நடித்துக் கொண்டிருப்பவர் ஸ்ரீலீலா. சிவகார்த்திகேயன் நடித்த `பராசக்தி' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் நேற்று தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்தகொண்டார். ’’வெற்றி தோல்விகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்’’ என்றதும். "பயிற்சி இல்லையே என்பது பற்றித்தான் பயப்பட வேண்டுமே தவிர, தோல்வியைக் கண்டு என்றும் பயப்படக் கூடாது. இந்தப் பாடமதான் நம்மை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். மேலும், வெற்றி என்பது ஓர் இலக்கு அல்ல, அது ஒரு பயணம். நீங்கள் முன்னோக்கிச் சென்றகொண்டே இருங்கள், உங்களுக்குப் பெரிய வெற்றிகளும், சிறிய விஷயங்களில் மகிழ்ச்சியும் கிடைக்கும" என்றார் ஸ்ரீலீலா.
‘’அந்த நிகழ்வில் வாழ்க்கையில் சோகமான விஷயங்கள் நடந்தால் அதனை எப்படி எதிர்கொள்வீர்கள்’’ எனக் கேட்டதும் "எனக்கு வருத்தமான விஷயங்கள் நடக்கும்போது உடனடியாக அழுது அந்தச் சோகத்தைக் கலைத்துவிடுவேன். முகத்தைக் கழுவிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிடுவேன். நான் சோகமாக இருப்பதால் எதுவும் இங்கே மாறிவிடாது. நான் சாலையில் பார்க்கும் மனிதர்களைக் கவனிப்பேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும், வலி இருக்கும், சந்தோசம் இருக்கும். அதுதான் வாழ்க்கை" என்றார்.
’’உங்களை இங்கு லேடி சூப்பர்ஸ்டார் என அழைத்தார்கள். லேடி சூப்பர்ஸ்டாராக எதிர்காலத்தில் ஆக விருப்பமா, மேலும் அவர் சென்னையிலேயே திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். தமிழ்நாட்டு இளைஞர்கள் குறித்து உங்கள் கருத்து என்ன” என்றதும், "எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர் நயன்தாரா அக்கா.
அவர் என்னுடைய ரோல்மாடல் போன்றவர். சென்னை பசங்க மிகவும் இனிமையானவர்கள்தான், ஆனால், அதெற்கெல்லாம் (திருமணம்) இன்னும் நிறைய காலம் இருக்கிறது" என்றார்.

