பெற்றோருக்கு நன்றி சொன்ன சாய்.. கண்கலங்கிய திப்பு - ஹரிணி! | Sai Abhyankkar | Tippu | Harini
பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜூ நடிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ள படம், `ட்யூட்'. இப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17 வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் மியூசிக் கன்சர்ட் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் பேசியபோது " ‘ஆசகூட’ பாடல் வெளியாவதற்கு இரண்டு நாட்கள் முன்பு கீர்த்தி என் ஸ்டுடியோவுக்கு வந்தார். அவர் பேசிய விதத்திலேயே எனக்கு இந்தப் படத்தில் பணியாற்ற வேண்டும் என்ற உணர்வு வந்தது. என்னுடைய முதல் படம் தீபாவளிக்கு வருகிறது என்பது மகிழ்ச்சி.
பிரதீப் ஓர் அற்புதமான திறமைக்காரர். ஒவ்வொரு காட்சியும் இசையமைக்கும்போதும் உங்கள் நடிப்பு, மமிதா நடிப்பு பார்க்கும்போதும் உற்சாகமாக இருந்தது. ’ஆசகூட’ பாடலில் மமிதாவை நடிக்க வைக்க முயற்சித்தேன். ஆனால் வேறு படப்பிடிப்பு இருந்ததால், அவர் வர முடியவில்லை. இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பு, பின்னணி இசைக்கும் கிடைக்கும் என நம்புகிறேன். என்னுடைய விருப்பத்திற்கு மதிப்பு தந்த என் பெற்றோருக்கு நன்றி. எல்லோருடைய அன்புக்கும் நன்றி" என்றார். அவர் பேசியதை மகிழ்ச்சியோடு தந்தை திப்புவுக்கு, கண்கலங்கி நெகிழ்ச்சியாக தாய் ஹரிணியும் கேட்டு ரசித்தனர்.