நடிகர்களுக்கு கருப்பு மேக்கப் ஏன்? - மாரி செல்வராஜ் சொன்ன பதில் | Bison | Dhruv | Anupama
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், பசுபதி, லால், அமீர், அனுபமா, ரஜிஷா ஆகியோர் நடித்து வெளியான படம் `பைசன்'. இப்படத்தில் முக்கியமாக துருவ், ரஜிஷா போன்ற சில நடிகர்களுக்கு தோலின் நிறத்தை கருப்பாக மாற்றி படத்தை எடுத்திருப்பார் மாரி செல்வராஜ். இதுபற்றி ஒரு பேட்டியில் கேள்வி முன்வைக்கப்பட்டது.
அந்தப் பேட்டியில், "முதன்மை கதாபாத்திரங்களில் நடித்தவர்களுக்கு, கருப்பாக இருப்பதைப்போல மேக்கப் செய்து நடிக்க வைத்திருப்பது தெரிகிறது. இதில் என்ன விமர்சனம் வருகிறது என்றால், இப்படிச் செய்வதற்குப் பதிலாக இயற்கையாகவே கருப்பாக இருப்பவர்களை அழைத்து வந்து நடிக்க வைக்கலாமே. அப்படி இருப்பவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு இதனால் தடுக்கப்படுகிறதுதானே?" எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதில் சொன்ன மாரி செல்வராஜ், "அது சாய்ஸ்தானே? இப்போது இன்னொரு பிரச்னைகூட சொல்லலாம். ஒரு கதாபாத்திரத்தை, மாற்றுத்திறனாளியாக எழுதி இருக்கிறோம் என்றால், நிஜமாகவே அவரை அழைத்து வந்து நடிக்க வைக்க முடியாதல்லவா? அவர்களை துன்புறுத்த முடியாதல்லவா? ஒருவர் சிவப்பாக இருக்கிறார், அழகாக இருக்கிறார் என்பதற்காக நாங்கள் தேர்வு செய்வதில்லை. யாருக்கு ஆர்வம் இருக்கிறதோ, யார் அர்ப்பணிக்க தயாராக இருக்கிறார்களோ, இந்தக் கதைக்காக எதனையும் செய்ய தயாராக இருக்கிறார்களா எனப் பார்த்துதான் தேர்வு செய்கிறோம்" என்றார்.