\
Maragatha Nanayam 2
Aadhi, Nikki, PBSweb

`மரகத நாணயம் 2' படம் பூஜையுடன் துவக்கம்! | Maragatha Nanayam 2

இந்த நிகழ்வில் கார்த்தி, ஆர்யா, வெங்கட்பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் கார்த்தி க்ளாப் அடிக்க, வெங்கட்பிரபு ஆக்ஷன் சொல்லி படப்பிடிப்பை துவக்கி வைத்துள்ளனர்.
Published on
Summary

மரகத நாணயம் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இதில் ஆதி, நிக்கி கல்ராணி, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கார்த்தி க்ளாப் அடிக்க, வெங்கட்பிரபு ஆக்ஷன் சொல்லி படப்பிடிப்பை துவக்கினர். பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கி 2017ல் வெளியான படம் `மரகத நாணயம்'. ஃபேண்டஸி காமெடி படமாக இது மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹிட்டானது. சில மாதங்களுக்கு முன் `மரகத நாணயம் 2' படத்திற்கான அறிவிப்பு வெளியானது.

இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. மரகத நாணயம் 2 படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி உடன் ப்ரியா பவானி சங்கர், சத்யராஜ், முனிஷ்காந்த், ஆனந்தராஜ்,  டேனி, அருண்ராஜா காமராஜ் மற்றும் முருகானந்தம் ஆகியோர் இணைகிறார்கள். இந்த நிகழ்வில் கார்த்தி, ஆர்யா, வெங்கட்பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் கார்த்தி க்ளாப் அடிக்க, வெங்கட்பிரபு ஆக்ஷன் சொல்லி படப்பிடிப்பை துவக்கி வைத்துள்ளனர்.

Maragatha Nanayam 2
"அஜித் சாரோடு அடுத்த படம்.." `சிறுத்தை' சிவா சொன்ன தகவல் | Ajith | Siva

முதல் பாகத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், ஒளிப்பதிவாளர் பி.வி. சங்கர், எடிட்டர் திருமலை ராஜன் ஆர், கலை இயக்குனர் என்.கே. ராகுல் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள். முதல் பாகத்தை தயாரித்த ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி டில்லி பாபு காலமாகிவிட்டாலும், ஆக்ஸஸ் பிலிம் ஃபேக்டரி பேனரின் கீழ் இப்படத்தை தேவ், கே.வி. துரை, `குட் ஷோ' மனிஷ் சிங்கால், `டங்கல் டிவி' துர்காராம் சௌத்ரி, ஆர்.டி.சி மீடியா மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

Maragatha Nanayam 2
சிவகார்த்திகேயனின் `சேயோன்'.. இன்று ஃபர்ஸ்ட் லுக், நாளை புரோமோ! | Sivakarthikeyan | Seyon
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com