சிவகார்த்திகேயனின் `சேயோன்'.. இன்று ஃபர்ஸ்ட் லுக், நாளை புரோமோ! | Sivakarthikeyan | Seyon
சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்தை சிவக்குமார் முருகேசன் இயக்க, சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். 'ரெமோ' படத்திற்கு பிறகு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. சிவாவின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை புரோமோ வெளியாகவுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகும் `சேயோன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான `பராசக்தி' படத்திற்கு பிறகு, சிவா நடிக்கும் படத்தை யார் இயக்கப் போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சமீபத்தில் சிவா இது பற்றி பதில் அளித்த போது சீக்கிரமே அறிவிப்பு வரும் எனக் கூறியிருந்தார்.
சிவாவின் 26வது படமாக உருவாகும் இப்படத்தை வெங்கட்பிரபு இயக்குவாரா? சிபி சக்கரவர்த்தி இயக்குவாரா? என எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது சிபி சக்கரவர்த்தி, ரஜினி நடிப்பில் தலைவர் 173 படத்தை இயக்க ஒப்பந்தமானார். இன்னொரு பக்கம் வெங்கட்பிரபு படம் என்ன நிலையில் இருக்கிறது என தெரியவில்லை. அது பற்றி மங்காத்தா ரீ ரிலீஸ் பார்க்க வந்த அவரிடம் கேட்கப்பட "அது எனக்கு தெரிஞ்சா சொல்ல மாட்டேனா" என கூறினார்.
இந்த சூழலில் தான் சிவக்குமார் முருகேசன் அந்த இடத்தை பிடித்துள்ளார். சிவக்குமாரின் முதல் படமான `தாய் கிழவி'யின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தான். ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள அந்தப் படம் பிப்ரவரி 27ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தை பார்த்து பிடித்து போக, தனக்கு ஏற்ற கதை இருக்கிறதா என சிவக்குமாரிடம் கேட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்தக் கதை சிவாவுக்கு பிடிக்க, உடனடியாக படத்தை ஒப்பந்தம் செய்து படத்தின் புரோமோவையும் ஷூட் செய்து முடித்திருக்கிறார்கள். `ரெமோ' படத்துக்கு பின் சிவா படத்தில் இணைந்துள்ளார் சந்தோஷ் நாராயணன். அமரன் படத்தை தொடர்ந்து மறுபடி சிவகார்த்திகேயன் நடிக்கும் `சேயோன்' படத்தையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. நாளை சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் புரோமோ காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளது.

