\
Manikandan
ManikandanNew Film

மணிகண்டன் நடிக்கும் புதிய படம்! | Manikandan | Tamil Film

நீலம் ப்ரொடக்ஷன் நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசராக பணியாற்றியவர் ஆர்.ராகேஷ். இவர் துவங்கியுள்ள ரைனோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளாராம் மணிகண்டன்.
Published on

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வளர்ந்து வருபவர் மணிகண்டன். `காதலும் கடந்து போகும்' `8 தோட்டாக்கள்', `விக்ரம் வேதா', `காலா' எனப் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர், `குட் நைட்', `லவ்வர்', `குடும்பஸ்தன்' படங்களில் ஹீரோவாக நடித்து வரவேற்பை பெற்றார்.

தற்போது இவர் நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் ப்ரொடக்ஷன் நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசராக பணியாற்றியவர் ஆர்.ராகேஷ். இவர், கபாலி , காலா , பைசன் போன்ற பிரம்மாண்ட வெற்றி திரைப்படங்களின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். இவர் துவங்கியுள்ள ரைனோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளாராம் மணிகண்டன்.

Manikandan
Manikandan
Manikandan
சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்' ரிலீஸ் எப்போது? படக்குழுவின் புது அப்டேட் | Suriya| Vishwanath & Sons

வருகின்ற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக தொடங்க உள்ள நிலையில், இயக்குநர், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது எனத் தகவல். தமிழ் சினிமாவில் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தலைமுறை திரைப்படங்களில், இந்த படம் மேலும் ஒரு முக்கியமான மற்றும் பேசப்படும் படைப்பாக மாறும் என சொல்கிறது தயாரிப்பு தரப்பு.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com