சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்' ரிலீஸ் எப்போது? படக்குழுவின் புது அப்டேட் | Suriya| Vishwanath & Sons
சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்'. சூர்யாவின் 46வது படமான இதில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
`கருப்பு' படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானதைத் தொடர்ந்து, சூர்யாவின் அடுத்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார் என்பதால் அந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது. இப்படம் முன்பு ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. படத்தின் டீசர் வெளியாகி பெரிய வரவேற்பையும் பெற்றது.
ஆனால், இப்படத்தின் ரிலீஸ் இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி, இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் தருணங்கள் நிறைந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது.

