
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் `அரசன்' படப்பிடிப்பு நேற்று முதல் கோவில்பட்டியில் துவங்கியுள்ளது. மூன்று வாரங்கள் இந்த முதற்கட்ட படப்பிடிப்பு நடக்கும் எனவும், அடுத்தகட்ட படப்பிடிப்பில் விஜய் சேதுபதி இணைவார் எனவும் சொல்லப்படுகிறது. இன்று தயாரிப்பாளர் தாணு ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
`காக்கா முட்டை', `ஆண்டவன் கட்டளை', `குற்றமே தண்டனை', `கடைசி விவசாயி' படங்களுக்கு பிறகு மணிகண்டன் இயக்கத்தில் `காட்டான்' என்ற வெப்சீரிஸ் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடித்து தயாரித்துள்ள இதனை அஜித் உடன் இணைந்து மணிகண்டன் இயக்கியுள்ளார்.
`மேயாதமான்', `ஆடை', `குலுகுலு' படங்களுக்கு பிறகு ரத்னகுமார் இயக்கியுள்ள படம் `29'. இதில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, செனாஷ்ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
சுதீப் நடித்துள்ள `Mark' பட டிரெய்லர் வெளியீடு. இப்படம் டிசம்பர் 25 வெளியாகவுள்ளது.
அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகிபாபு, வடிவுக்கரசி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவக்கம். அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இப்படத்தை இயக்குக்கிறார்.
பாலகிருஷ்ணாவின் `அகண்டா 2' டிசம்பர் 5ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் சில சிக்கல் காரணமாக படத்தை டிசம்பர் 12ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இதனால் அந்த தேதியில் வெளியாக இருந்த `மோக்லி' டிசம்பர் 13ம் தேதிக்கு தள்ளிப் போனது, இன்னொரு படமான `Psych Siddhartha' ஜனவரி 1க்கு தள்ளிப் போனது. இப்போது டிசம்பர் 11 பிரீமியர், 12 ரிலீஸ் என மாஸ் ஆக வருகிறார் NBK.
த்ரிவிக்ரம் அடுத்து இயக்கும் படத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார் என சில தினங்கள் முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் தலைப்பு `Aadarsha Kutumbam House no 47 - AK 47' என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநிதி ஷெட்டி இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் படம் அடுத்தாண்டு கோடையில் வெளியாகவுள்ளது.
ரவி தேஜா நடித்துள்ள `Bhartha Mahasayulaku Wignyapthi' படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் Addham Mundhu பாடல் வெளியாகியுள்ளது.
மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் மிகப்பெரிய ஹிட்டான த்ரிஷ்யம் இரு பாகங்களை தொடர்ந்து, 3வது பாகம் உருவாகியுள்ளது. இதே படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆகிறது. ஆனால் கண்டிப்பாக முதலில் மலையாள `த்ரிஷ்யம் 3' தான் வெளியாகும் எனவும், இன்னும் 3 -4 மாதங்களுக்குள் படம் வெளியாகும் எனவும் ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்வில் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுக்க அதிகம் எதிர்பார்க்கப்படும் அடுத்த மார்வல் படம் Avengers: Doomsday. இப்படத்தின் டீசர் நீளம் 1 நிமிடம் 25 நொடிகள் எனவும், இந்த டீசர் அவதார் படத்துடன் டிசம்பர் 19 வெளியாகவுள்ளது எனவும் சொல்லப்படுகிறது.