Mamitha Baiju shares experience of acting with Dhanush
Mamitha BaijuKara

"தனுஷ் சாருடன் நடித்த காட்சியில்..." - மமிதா சொன்ன அனுபவம் | Dhanush | Manitha Baiju | Kara

தனுஷ் சார் மிக கடினமான உழைப்பாளி. மிகவும் பேரார்வத்துடன் அவர் சினிமாவை அணுகுகிறார். கொடுக்கப்படும் கதாபாத்திரத்திற்கு அவர் மிகவும் உண்மையாக இருக்கிறார்.
Published on

தனுஷ், மமிதா பைஜூ, ஜெயராம், கருணாஸ் எனப் பலரும் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள படம் `கர'. ஏப்ரல் 30ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படம் தெடர்பான பேட்டிகளை அளித்து வருகிறது படக்குழு. சமீபத்தில் இப்படத்தில் நடித்துள்ள மமிதா கொடுத்த பேட்டியில் தனுஷ் உடன் பணியாற்றிய அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து பேசிய மமிதா பைஜூ "தனுஷ் சார் மிக கடினமான உழைப்பாளி. மிகவும் பேரார்வத்துடன் அவர் சினிமாவை அணுகுகிறார். முழுநாள் வேலை செய்கிறோம் என சோர்வாகிறது என்றெல்லாம் சொல்லக்கூடாது. அவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பேன். கொடுக்கப்படும் கதாபாத்திரத்திற்கு அவர் மிகவும் உண்மையாக இருக்கிறார்.

Kara
KaraX
Mamitha Baiju shares experience of acting with Dhanush
`அரசன்' படப்பிடிப்பு ரீ-ஸ்டார்ட்! | Arasan | Simbu | Vetrimaaran

அந்த பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அதனை மேம்படுத்த வேலை செய்கிறார். அதை எல்லாம் கவனிக்கையில் நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது. ஒரு காட்சியில் எனக்கு பின்னால் கேமரா இருக்கிறது. அவர் நடிக்கும் காட்சி எடுக்கப்பட்டது. அவர் நடிப்பதை பார்த்து நான் என்னையே மறந்துவிட்டேன். பொதுவாக நான் அப்படி ஆகும் நபர் கிடையாது. இப்படித்தான் செய்யப் போகிறார் என நாம் நினைக்கும் போது, இதனை இப்படியும் செய்ய முடியுமா என்பதை போல நடிப்பார்." என்றார்.

Mamitha Baiju shares experience of acting with Dhanush
கோடிகள் தருவதாக சொல்லியும், குளிர்பான விளம்பரத்தை மறுத்தேன்! - ஜி வி பிரகாஷ் | G V Prakash

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com