இன்று வெளியாகிறது லியோ இரண்டாவது சிங்கிள் "BADASS" பாடல்!

லியோ படத்தின் "BADASS" பாடலின் ப்ரோமோ வீடியோ நேற்று நள்ளிரவு வெளியான நிலையில், இன்று மாலை 6 மணிக்கு "BADASS" பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
BADASS SONG
BADASS SONGFACEBOOK

நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் BADASS பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டுள்ளது.

முன்னதாக படத்தின் முதல் பாடலான “நான் ரெடி” வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிய சூழலில், லியோ படத்தின் இரண்டாவது பாடலான BADASS இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

லியோ
லியோ முகநூல்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள லியோ திரைப்படம், அடுத்த மாதம் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.

படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், நாளை மறுநாள் நடைபெறவிருந்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அறிவித்திருந்தது.

BADASS SONG
‘லியோ’ ஆடியோ லான்ச் ரத்து: இதுதான் காரணமா?

இதனால் மன உளைச்சலில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு BADASS பாடல் உற்சாகத்தை கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com