Rajinikanth
RajinikanthThalaivar 173

`Thalaivar 173' ஷூட் வெறும் மூன்று மாதங்களில் முடியுமா? | Rajinikanth | Cibi Chakaravarthi

இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது "ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பார்கள்." எனக் கூறியுள்ளார்.
Published on
Summary

ரஜினிகாந்த் தற்போது அதிகப்படங்களை கமிட் செய்திருக்கும் நிலையில், நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேகமாக நடக்கிறது. ஏப்ரல் இறுதியில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர் 173’ தொடங்கி, ஆகஸ்டில் கமலுடன் இணையும் KHXRK படப்பிடிப்பு துவங்கும் என்பதால், ‘தலைவர் 173’ மூன்று மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு, 2027 பொங்கலுக்கு வெளியீடு குறிக்கோளாக வைக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் தான் இப்போது அதிக படங்களை கமிட் செய்து வைத்திருக்கும் தமிழ் நடிகர் என்றே சொல்லலாம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் `ஜெயிலர் 2' படத்தில் நடித்து முடித்துவிட்டார். அடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கும் படம், நெல்சன் இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடிக்கும் படம் ஆகியவற்றை கையில் வைத்திருக்கிறார்.

Thalaivar 173 - Rajinikanth, Cibi
Thalaivar 173 - Rajinikanth, Cibiweb

முதலில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் `ஜெயிலர் 2' படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது "ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பார்கள்" எனக் கூறியுள்ளார். முதலில் இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது. இப்போது இதில் மாற்றம் நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Rajinikanth
"என் மகள் கேட்பதெல்லாம் கே-பாப்தான்" - மகள் பற்றி பேசிய ஜிவி பிரகாஷ் | G V Prakash Kumar | Anvi

அவரும் கமலும் இணைந்து நடிக்கும் படம் பற்றி கேட்கப்பட்ட போது "KHXRK படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளது" எனக் கூறினார் ரஜினிகாந்த். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது `தலைவர் 173' படப்பிடிப்பு மிக குறுகிய தயாரிப்பாக உருவாக உள்ளது என்பதை தான். சிபி சக்கரவர்த்தி ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முடிந்து ஷுட்டுக்கு தயாராகிவிட்டார். ஏப்ரல் கடைசி வாரத்தில் இப்படம் துவங்கும் என சொல்லப்படுகிறது. ஆகஸ்ட் KHXRK படம் துவங்க உள்ளது என்றால், அதிகபட்சம் மூன்று - மூன்றரை மாதங்களில் `தலைவர் 173' படப்பிடிப்பை முடிக்க வேண்டும். ஷுட்டிங் காலம் கம்மி என்றாலும், படத்தில் வெளியீடு 2027 பொங்கல் என்பது ஆறுதல். எனவே போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நேரம் எடுத்து செய்யலாம்.

Rajinikanth
"பாலுமகேந்திரா சாரின் ஆசையை நிவர்த்தி செய்திருக்கிறீர்கள்!" - ’நீளிரா’ படத்திற்கு பாலா பாராட்டு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com