"என் மகள் கேட்பதெல்லாம் கே-பாப்தான்" - மகள் பற்றி பேசிய ஜிவி பிரகாஷ் | G V Prakash Kumar | Anvi
ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், `ஹேப்பி ராஜ்'. இப்படத்தின் புரமோஷனுக்காக பல பேட்டிகள் அளித்தார். அப்படியான ஒரு பேட்டியில் தன் மகள் அன்வி பற்றிய விஷயங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
அப்பேட்டியில், "நான் அதிக நேரம் செலவிடுவது என்னுடைய மகளுடன்தான். என் வாழ்க்கையில் சிறப்பான நேரங்கள் அவளுடன் இருப்பதுதான். வெளியே எங்கு போக வேண்டும் என்பதை அவளேதான் முடிவு செய்வாள். கடைக்கு, பீச்சுக்கு என எங்குச் செல்ல வேண்டும் என்ற திட்டம் அவளுடையதுதான். எங்கு கேட்கிறாரோ, அங்கே அழைத்துச் செல்வேன். அவளுடைய இசை ஆர்வம் முழுக்க கே-பாப் மேல்தான் இருக்கிறது.
என்ன பாடல் கேட்க விரும்புகிறாரோ, அதை நான் போட்டுக் கொடுப்பேன். என்னுடைய பாடல்களில் கோல்டன் ஸ்பாரோ பாடல் மிகவும் பிடிக்கும். மற்றபடி, என் ரசனையை அவர் மேல் திணிப்பதில்லை. அவருக்கு என்ன பிடிக்கிறதோ, அதை கேட்பார், பிளே செய்வதுதான் என்னுடைய வேலை" என்றார் ஜி வி பிரகாஷ்.

