தவெக தலைவர் விஜய்க்கு இயக்குநர் அமீர் எச்சரிக்கை
தவெக தலைவர் விஜய்க்கு இயக்குநர் அமீர் எச்சரிக்கைweb

’CBI விசாரணைக்கு பயந்து..’ விஜய்க்கு இயக்குநர் அமீர் எச்சரிக்கை!

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரவிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Published on
Summary

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. ஆனால், பாஜகவுடன் இணைவதற்கான முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இயக்குநர் அமீர் விஜய்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசியலில் புதுமுகமாக களமிறங்கிய விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், முதல்முறையாக 2026 சட்டப்பேரவை தேர்தலில் களம்காணவிருக்கிறது. தொடக்கத்தில் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என பிரகடனம் செய்த தவெக தலைவர் விஜய், இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமரித்தார். ஆனால் போகப்போக திமுகவை பகிரங்கமாக விமர்சித்த விஜய், பாஜகவை விமர்சிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt desk

இந்தசூழலில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் எந்தக்கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை. தேர்தலில் தனித்து போட்டியிடும் எண்ணத்தில் இருக்கும் தவெக, மகளிர் தினவிழாவில் பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்தது.

இந்நிலையில் தற்போது தவெக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக தலைவர் விஜய்க்கு இயக்குநர் அமீர் எச்சரிக்கை
உங்கள் உண்மைமுகம் தான் என்ன..? விஜய்க்கு தவெக ரஞ்சனா நாச்சியார் அறிக்கை!

விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த இயக்குநர் அமீர்..

சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவலின் படி, என்.டி.ஏ கூட்டணியில் விஜயை இணைப்பதற்கு பாஜக சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்காக, ஆந்திர துணைமுதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் வழியாக விஜயிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகவிருக்கிறது.

விஜயை விமர்சித்த அமீர்
விஜயை விமர்சித்த அமீர்web

மேலும், சிபிஐ, ஜனநாயகன் படத் தணிக்கைக் குழு வழியாக விஜயை பணிய வைக்க மத்திய அரசு முயல்வதாகவும் கூறப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, இன்று மறுத்தணிக்கைக் குழு பார்வையிடுவதாக இருந்த ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை ,அதிகாரி ஒருவரின் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் தள்ளிப்போய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசூழலில் விஜய் என்.டி.ஏ கூட்டணியில் இணையவிருப்பதாக வெளியான தகவல் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இயக்குநர் அமீர், “CBI விசாரணைக்கு பயந்து NDA கூட்டணிக்கு போயிராதீங்க, அதோட உங்க அரசியல் முடிஞ்சிடும்” என பதிவிட்டுள்ளார். இதற்கு முன் விஜயின் விவாகரத்து பிரச்னை குறித்தும் அமீர் கருத்து தெரிவித்திருந்தார்.

தவெக தலைவர் விஜய்க்கு இயக்குநர் அமீர் எச்சரிக்கை
’மனைவி, மகளை விரட்டிவிட்டு.. மகளிர் தினவிழா’ - விஜயை விமர்சித்த இயக்குநர் அமீர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com