இயக்குநராக அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன்! | Director
நடிகர் கருணாஸ் மற்றும் பாடகி கிரேஸ் ஆகியோரின் மகன் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகிறார். `அழகுக்குட்டிச் செல்லம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமான கென், `அசுரன்', `வாத்தி', `விடுதலை: பாகம் 2' போன்ற படங்களில் நடித்தார். இந்த நிலையில், தற்போது கென் இயக்குநராக சினிமாவில் அறிமுகமாக உள்ளார், இப்படத்தின் நாயகனாகவும் அவரே நடிக்கிறார். இது ஒரு ஜாலியான பள்ளிக்கூட பின்னணியில் உருவான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதன் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு `காதலன்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், தெலுங்கில் வெளியான ’கோர்ட்’ பட நாயகி ஸ்ரீதேவி, இதில் நாயகியாக நடிக்க உள்ளார் எனவும் தகவல். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும் நாளை (அக்டோபர் 18) இப்படம் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.