\
தனுஷுடன் கருணாஸ்.. கென்: ட்ரெண்டாகும் ‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்புத்தளப் புகைப்படம்

தனுஷுடன் கருணாஸ்.. கென்: ட்ரெண்டாகும் ‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்புத்தளப் புகைப்படம்

தனுஷுடன் கருணாஸ்.. கென்: ட்ரெண்டாகும் ‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்புத்தளப் புகைப்படம்
Published on

தனுஷ் நடிக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் படப்பிடிப்புத்தள புகைப்படம் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிறது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். சென்னையில் தொடங்கியது இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு. அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் தொடங்கியது. அதில், தனுஷுக்கும் நித்யா மேனனுக்குமான பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கியது.

இந்த நிலையில், நடிகர் கருணாஸ், அவரது மகன் கென் தனுஷுடன் ‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே, கென் ‘அசுரன்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com