\
Karthi
KarthiKarthi 30

தெலுங்கு இயக்குநருடன் கைகோர்த்த கார்த்தி! | Karthi 30

தெலுங்கில் MAD என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கல்யாண் சங்கர். முதல் படத்திலேயே பெரிய ஹிட் படத்தை கொடுத்த இவர், இப்போது கார்த்தியின் 30வது படத்தை இயக்க உள்ளார்.
Published on
Summary

கார்த்தியின் 30வது படமான ‘Karthi30’ அறிவிப்பு அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. கல்யாண் சங்கர் இயக்கும் இந்த படம், சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகிறது. MAD மூலம் ஹிட் கொடுத்த கல்யாண் சங்கர், கார்த்தியுடன் கைகோர்த்துள்ளார். பூஜை பிரம்மாண்டமாக முடிந்து, முக்கிய காட்சிகள் தீவிரமாக படமாக்கப்பட்டு வருகின்றன.

கார்த்தி, மீனாட்சி சௌத்ரி நடிப்பில் கல்யாண் சங்கர் இயக்கும் `Karthi30' பட அறிவிப்பு கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியீடு. தெலுங்கு திரையுலகில் பிரபலமான தயாரிப்பு நிறுவனம் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் இப்படத்தை தமிழ்-தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கிறது.

தெலுங்கில் MAD என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கல்யாண் சங்கர். முதல் படத்திலேயே பெரிய ஹிட் படத்தை கொடுத்த இவர், இப்போது கார்த்தியின் 30வது படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு வேகமாக முன்னேறி வருகிறது. படத்தின் முக்கிய காட்சிகள் தீவிரமாக படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Karthi
ஹை கோர்ட் மஹாராஜா தான் கருப்பு பட INSPIRATION-ஆ? - ஆர் ஜே பாலாஜி சொன்ன பதில்

வாத்தி, லக்கி பாஸ்கர், விஸ்வநாத் & சன்ஸ் ஆகிய படங்களுக்கு பிறகு, சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மீண்டும் இப்படம் மூலம் ஒரு பிரமாண்டமான படைத்த தயாரித்து வருகிறது. படக்குழு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் உள்பட முக்கிய அப்டேட்களை பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளது. இது தவிர கார்த்தியின் சர்தார் 2, மார்ஷல் ஆகிய படங்களும் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

Karthi
ஜி டி நாயுடு பயோபிக் GDN ரிலீஸ் அப்டேட்! | Madhavan | G D Naidu
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com