காலம்.. கவிதை.. கண்ணதாசன்..! "‘கண்ணே கலைமானே’தான் என் கடைசி பாடல்.." முன்கூட்டியே சொன்ன கவியரசு!

"ராஜா.. நீ அதிர்ஷ்டக்காரன் டா.. காலைல தான் விசுவுக்கு ஒரு பாட்டு எழுதினேன். அதுதான் என்னோட கடைசி பாடல்னு சொன்னேன். ஆனா இப்போ உனக்குத்தான் கடைசி பாடல எழுதியிருக்கேன்” என்று இளையராஜாவிடம் நெகிழ்ச்சியாக பேசிவிட்டு புறப்பட்டுள்ளார் கண்ணதாசன்
kannadasan
kannadasanfile image

தமிழ் சினிமா இதுவரை எத்தனையோ கவிஞர்களை பார்த்திருந்தாலும், அத்தனை பேருக்கும் முன்னோடி என்றால் அது கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசன்தான்.. ஆகப்பெரும் எழுத்தாளர், கவிஞரான கண்ணதாசனின் கடைசி பாடல் குறித்தும் ‘க’ எனும் எழுத்துக்கும், கண்ணதாசனுக்கும் இருக்கும் ஒற்றுமைகளை பற்றியும், அவரது 42வது ஆண்டு நினைவுநாளில் விடை தேடி பயணிக்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு.

தனது எழுத்துப்பசிக்கு தீணி போட 16 வயதில் வீட்டிலிருந்து வெளியேறி சென்னை வந்த கண்ணதாசன், அப்போது முதலே எழுத்துக்களை வடிக்கத்தொடங்கினாலும், ‘நிலவொளியிலே’ என்ற கதை முதன்முதலாக கிரகலட்சுமி எனும் பத்திரிகையில் பிரசுரமானது. அதுமுதல் எழுத்தின் வேகத்தை கூட்டிய கண்ணதாசன், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், பல்வேறு கட்டுரைகள், கதைகள், புத்தகங்களை எழுத்தியுள்ளார்.

kannadasan
தமிழ்நாடு ஃபார்முலா வழியில்.. தெலங்கானாவில் போட்டி போட்டு அறிவிப்புகளை வெளியிடும் காங். Vs பிஆர்எஸ்!

1949ம் ஆண்டு வெளிவந்த ‘கன்னியின் காதலி’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘களங்காதிரு மனமே’ என்ற பாடல்தான் தமிழ் சினிமாவில் கண்ணதாசனின் முதல்பாடல். அது முதல் அடுத்த 40 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவை தனது எழுத்துக்களால் செம்மை படுத்தியிருந்தார் கண்ணதாசன். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும், சூழல்களுக்கும் ஏற்றபடி எழுத்துக்கு உயிர் கொடுத்த கண்ணதாசன், இன்றளவிலும் ஒரு பாடலாசிரியராகவே பலராலும் அறியப்படுகிறார். அதையும் தாண்டி, கவிதை மொழியில் ஒரு கவிஞராக கண்ணதாசன் ஆகப்பெரும் ஆளுமை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

பிறந்தது முதல் இறந்து இறுதிச்சடங்கு வரை அனைத்து சூழல்களுக்கும் கைகொடுக்கும் கண்ணதாசனின் வரிகள் ஒவ்வொன்றும் தமிழை செம்மைபடுத்தியிருக்கும். தமிழ் சினிமாவில் ஆயிரக்கணக்கான பாடல்களை வடித்த கண்ணதாசனின் கடைசி பாடலாக மூன்றாம் பிறை திரைப்படத்தின் ‘கண்ணே கலைமானே’ எனும் பாடல் அமைந்தது. திரைப்படங்களுக்கு பாடல் எழுதியது போதும் என்று நினைத்த கண்ணதாசன், அவரது நெருங்கிய நண்பர் எம்.எஸ்.விக்கு ஒரு பாட்டு எழுதி கொடுத்துவிட்டு, இதுதான் எனது கடைசி பாடல் என்று கூறியுள்ளார்.

kannadasan
’லாகூரில் நடந்தது நினைவில்லையா?’ விமர்சனத்தை எழுப்பிய ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்.. வலுக்கும் கண்டனங்கள்!

இதுதான் எனது கடைசி பாடல்.. - கண்ணதாசன்

ஆனால், அன்றைய தினமே ‘மூன்றாம் பிறை’ படத்திற்காக பாடல் எழுதுமாறு இளையராஜாவும், பாலு மகேந்திராவும் கேட்க அரைமணி நேரத்தில் ‘கண்ணே கலைமானே’ எனும் பாடலை எழுதிக்கொடுத்துள்ளார் கண்ணதாசன். பாடல் வேலைகள் முடிந்து பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து கிளம்பிய கண்ணதாசன், "ராஜா.. நீ அதிர்ஷ்டக்காரன் டா.. காலைல தான் விசுவுக்கு ஒரு பாட்டு எழுதினேன். அதுதான் என்னோட கடைசி பாடல்னு சொன்னேன். ஆனா இப்போ உனக்குத்தான் கடைசி பாடல எழுதியிருக்கேன்” என்று இளையராஜாவிடம் நெகிழ்ச்சியாக பேசிவிட்டு புறப்பட்டுள்ளார் கண்ணதாசன்.

அடுத்த ஒரு ஆண்டில் அதாவது 1982ல் மரணம் எனும் தூது வந்து கண்ணதாசனை அழைத்துச் சென்றது. தனது கடைசி பாடல் என்று முன்கூட்டியே சொல்ல காரணம், சினிமாவுக்கு பாட்டு எழுதியது போதும் என்று அவர் எண்ணியதுதான் என்கின்றனர் கண்ணதாசனுடன் நெருங்கி பழகியவர்கள்.

காலம்.. கவிதை.. கண்ணதாசன்..

கலையுலகில் தனி முத்திரை பதித்த கண்ணதாசனுக்கும், ‘க’ என்ற எழுத்துக்கும் இருக்கும் தொடர்பு உண்மையில் அபூர்வமானதுதான். ஆம், முத்தையா என்ற தனது இயற்பெயரை ண்ணதாசன் என்று மாற்றிக்கொண்டார் கவியரசு. கலையுலகில் அவர் பாடல் எழுதிய முதல் படம், ‘ன்னியின் காதலி’. முதல் பாடலின் தொடக்க வரிகள் ‘ளங்காதிரு மனமே’. அவர் கடைசியாக எழுதிய பாடல் ‘ண்ணே கலைமானே’. கடைசியாக எழுதிய கவிதை ‘ருவறை முதல் கல்லறை வரை’. அவருக்கு மக்கள் கொடுத்த பட்டம் ‘வியரசு’. அவரின் நெருங்கிய நண்பர் ‘லைஞர்’.

சமகால திரையுலகில் இசைக்கு பிரதான இடம் கொடுக்கப்படும் நிலையில், தனது காலத்தில் தமிழ் மொழிக்கும், வரிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தார் கண்ணதாசன். அதனால்தான், அவர் எழுதிய வரிகள் காலம் கடந்து இன்றளவும் நெஞ்சை பிசைகின்றன என்று அவரது நினைவுநாளில் நெகிழ்கின்றனர் ரசிகர்கள்.

அரசவைக் கவிஞர், விருதுகள், கவியரசு, கவிச்சக்கரவர்த்தி போன்ற பட்டங்கள் என்று அத்தனை மைல்கல்லையும் தொட்டுவிட்ட கண்ணதாசனை, காலம் கடந்தும் காதல் செய்கிறது தமிழுலகம்.

எழுத்து - யுவராம் பரமசிவம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com