\
Kamalhaasan
KamalhaasanThe Odyssey

'தி ஒடிஸி' படத்தை பாராட்டி கமல் பதிவு | The Odyssey | Kamalhaasan

ஹோமர் கனவு கண்டார்; நோலன் அதைச் செய்து காட்டத் துணிந்தார்; நான் கைதட்டி பாராட்டினேன்.
Published on
Summary

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘தி ஒடிஸி’ படத்தைப் பற்றி கமல்ஹாசன் பெருமையாகப் பாராட்டியுள்ளார். 2018ல் நோலனைச் சந்தித்தபோது ‘டன்கிர்க்’ படத்தை டிஜிட்டலில் பார்த்ததற்காக மன்னிப்பு கேட்ட அனுபவத்தையும் நினைவுகூர்ந்த அவர், ஹோமரின் கனவை நோலன் துணிந்து திரையில் காட்டியதாகக் கூறி, இந்தக் காலத்தால் அழியாத காவியத்தை சினிமா ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'தி ஒடிஸி'. இந்தப் படம் பெருவாரியான சினிமா ரசிகர்களால் பாராட்டப்பட்டது. தற்போது இந்தப் படம் குறித்து கமல்ஹாசன் பாராட்டி பதிவிட்டுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு கிறிஸ்டோபர் நோலனைக் கமல்ஹாசன் நேரில் சந்தித்தபோதுகூட, ஃபிலிமில் எடுக்கப்பட்ட 'டன்கிர்க்' படத்தைச் டிஜிட்டல் வடிவில் பார்த்ததற்காக மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

இப்போது 'தி ஒடிஸி' படம் குறித்து கமல் பதிவிட்டுள்ள குறிப்பில் "ஹோமர் கனவு கண்டார்; நோலன் அதைச் செய்து காட்டத் துணிந்தார்; நான் கைதட்டி பாராட்டினேன். சினிமா விரும்பிகளே, காலத்தால் அழியாத காவியமாகத் திகழும் இந்தப் படம் கட்டாயம் பார்க்கப்பட வேண்டிய ஒன்று!

Kamalhaasan
இரட்டை குழந்தைகளுக்கு `டாடா' ஆன கவின்! | Kavin

The Odyssey உலகம் முழுவதும் தனது காவியப் பயணத்தைத் தொடரும் வேளையில், அதற்கான எனது கவிதை அஞ்சலி இந்தியாவின் திரையரங்குகளில் பார்வையாளர்களைச் சென்றடையும். அதை விரைவில் இங்கும் பகிர்ந்துகொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Kamalhaasan
வானில் இயற்கையின் லைட் ஷோ! இந்த வாரம் காத்திருக்கும் அதிசயம்! விண்வெளியின் Double Treat!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com