Kaataan
KaataanJio Hotstar

விஜய் சேதுபதியின் `காட்டான்' - `Heartbeat 3'... Jio Hotstarன் புதிய 25 ரிலீஸ் | Vijay Sethupathi

இந்த நிகழ்வில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கமல்ஹாசன், நடிகர்கள் மோகன்லால், நாகார்ஜுனா, விஜய் சேதுபதி, மற்றும் தென்னிந்திய திரை உலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
Published on

தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சிக்காக, JioHotstar அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு கடிதத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் கையெழுத்திட்டது. சென்னையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம பூஷன் கமல்ஹாசன், தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், நடிகர்கள் மோகன்லால், நாகார்ஜுனா, விஜய் சேதுபதி, மற்றும் தென்னிந்திய திரை உலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் ஹாட்ஸ்டார் அடுத்து ஆண்டு தென்னிந்திய மொழிகளில் வெளியிட உள்ள புதிய படைப்புகளை அறிமுகப்படுத்தினார்.

மலையாலத்தில் நிவின் பாலி, ஸ்ருதி ராமச்சந்திரன் நடித்துள்ள சீரிஸ் `Pharma', நிகிலா விமல், லியோனா நடித்துள்ள `Anali', மீனா, வினீத் நடித்துள்ள `Secret Stories: ROSLIN', புதுமுக நடிகர்கள் நடிக்கும் Cousins And Kalyanams' போன்ற 4 புதிய வெப் சீரிஸ்களும், ஏற்கெனவே ஹிட்டான `Kerala Crime Files' சீரிஸின் மூன்றாவது சீசன், `1000 Babies'ன் இரண்டாவது சீசன் மற்றும் ரியாலிட்டி ஷோவான `Comedy Cooks' ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

Kaataan
படையப்பாவில் ஹாரீஸ் ஜெயராஜ்.. எடைக்கு போடப்பட்ட Deleted scenes | படையப்பா 15 சுவாரஸ்ய தகவல்கள்

தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள `Moodu Lantharlu' விஷ்வ தேவ், ஷிவாதமிகா நடித்துள்ள `Varam', காஜல் அகர்வால் நடித்துள்ள `Vishakha', ராதா நாயர், ஸ்ரீமுகி நடித்துள்ள `Mad for Each Other', போலீஸ் கதையான `Vikram on Duty', பிந்து மாதவி நடித்துள்ள `Batchmates' என 6 புதிய சீரிஸ்களும், ஏற்கெனவே ஹிட்டான `Save The Tiger' 3வது சீசன் மற்றும் `Roadies' என்ற ரியாலிட்டி ஷோ ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழில் விஜய் சேதுபதி நடித்துள்ள `காட்டான்', ஜிவி பிரகாஷ் நடித்துள்ள `Lucky The Superstar', விக்ராந்த் நடித்துள்ள `LBW - Love Beyond Wicket', யோகிபாபு நடித்துள்ள `கெணத்த காணோம்', விஜயகுமார் நடித்துள்ள `Resort', கதிர், திவ்ய பாரதி நடித்துள்ள `லிங்கம்', புதுமுகங்கள் நடித்துள்ள `Second Love' என 6 புதிய சீரிஸ்களும், ஏற்கெனவே வந்த `Heartbeat 3' மற்றும் `Good Wife' ஆகிய சீரிஸ்களின் இரண்டாவது சீசன் மற்றும் ஜெயப்பிரகாஷ், ஜெயசுதா, கௌரி கிஷன் நடித்துள்ள `Love Always' படம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com