Jiiva - Thalaivar Thambi Thalaimaiyil
JiivaThalaivar Thambi Thalaimaiyil

இந்தியில் ரீமேக்காகும் `தலைவர் தம்பி தலைமையில்'? | Jiiva | TTT

சமீபத்தில் படம் வெளியாகி 25 நாட்கள் கடந்ததை கொண்டாடும் விதமாக, அன்றைய நாளில் ரோகினி திரையரங்கில் படம் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு வேட்டி சேலையை பரிசளித்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.
Published on
Summary

ஜீவா நடிப்பில் வெளியான 'தலைவர் தம்பி தலைமையில்' படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் இந்தி ரீமேக் உரிமையை பெற்றுள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியானது மற்றும் 25 நாட்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, ரோகினி திரையரங்கில் பார்வையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் ஜீவா நடித்து பொங்கலுக்கு வெளியான படம் `தலைவர் தம்பி தலைமையில்'. இப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியிலும் லாபகரமான படமாக மாறியது இப்படம்.

சமீபத்தில் படம் வெளியாகி 25 நாட்கள் கடந்ததை கொண்டாடும் விதமாக, அன்றைய நாளில் ரோகினி திரையரங்கில் படம் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு வேட்டி சேலையை பரிசளித்துள்ளனர் தயாரிப்பாளர்கள். இப்போது இந்தப் படத்தின் இன்னொரு மைல் கல், `தலைவர் தம்பி தலைமையில்' பாலிவுட்டுக்கு செல்வது. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் படத்தைப் பார்த்து மிகவும் பிடித்து போக, இதன் இந்தி ரீமேக்உரிமையை பெற்றுள்ளார் என தகவல்.

Jiiva - Thalaivar Thambi Thalaimaiyil
"இது தியேட்டர் இல்லை..." - கண்டிப்பு காட்டிய அஜித் | Ajith

ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து வாரியத்தின் தலைவர் ஒரு திருமண வீட்டையும், மரண வீட்டையும் கையாள்வதில் எதிர்கொள்ளும் சவால்களே படத்தின் கதை. தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படம் பிப்ரவரி 13ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Jiiva - Thalaivar Thambi Thalaimaiyil
’மௌனம் பேசியதே to காதலர் தினம்..’ காதலர் தின ஸ்பெஷல் ரீ-ரிலீஸ்... வரிசை கட்டும் 4 படங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com