Ajith
AjithRace

"இது தியேட்டர் இல்லை..." - கண்டிப்பு காட்டிய அஜித் | Ajith

ரசிகர் மன்றத்தை கலைத்தது, முதலில் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் எனக் கூறுவது, தன்னை தல என அழைக்க வேண்டாம் எனக் கூறியது என பல நேரங்களில் தனது ரசிகர்களுக்கு நல்வழி காட்டி இருக்கிறார் அஜித்குமார்.
Published on
Summary

நடிகர் அஜித், துபாயில் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அங்கு அவரை சந்திக்க பல பிரபலங்கள் வருகை தருகின்றனர். சமீபத்தில், யாஸ் மெரினா சர்க்யூட்டில் நடந்த நிகழ்வில், ரசிகர்களின் ஒழுங்கின்மையை கண்டித்து, 'இது தியேட்டர் இல்லை' என கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்குமார் சினிமாவிலிருந்து இடைவெளி எடுத்து கார் ரேஸில் தீவிரமாக இயங்கி வருகிறார். துபாயில் ரேஸில் கலந்து கொள்ளும் அவரை பல பிரபலங்களும் நேரில் வந்து சந்தித்து வாழ்த்து கூறிவருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, தனது ரசிகர்கள் எப்போதெல்லாம் அத்துமீறுகிறார்களோ, அவர்களை கண்டிக்கவும் தவறியதில்லை அஜித்.

ரசிகர் மன்றத்தை கலைத்தது, முதலில் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் எனக் கூறுவது, தன்னை தல என அழைக்க வேண்டாம் எனக் கூறியது என பல நேரங்களில் தனது ரசிகர்களுக்கு நல்வழி காட்டி இருக்கிறார். அஜித் சமீபத்தில், அபுதாபியில் உள்ள யாஸ் மெரினா சர்க்யூட்டில் நடந்த பந்தயத்தில் பங்கேற்றார். இந்த நிகழ்வின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith
இளையராஜா பயோபிக் என்ன ஆனது? - படக்குழு விளக்கம் | Ilaiyaraaja Biopic | Dhanush

அந்த வீடியோவில், அஜித் ஒருவரிடம், "தயவுசெய்து ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள். இது தியேட்டர் இல்லை." என்று கூறியுள்ளார். ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்த செய்த விஷயங்கள் பொது வெளியில் இடையூரு செய்யும் வகையில் அமைய, அதற்கு இப்படி சொல்லி இருக்கிறார் அஜித். இந்த வீடியோ இப்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Ajith
’மௌனம் பேசியதே to காதலர் தினம்..’ காதலர் தின ஸ்பெஷல் ரீ-ரிலீஸ்... வரிசை கட்டும் 4 படங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com