\
Jiiva
JiivaThagappan

ஜீவாவின் `தகப்பன்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! | Thagappan | Jiiva

‘தெனாவட்டு ’ திரைப்படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் ஜீவா நடிக்கும் திரைப்படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது.
Published on
Summary

ரா. வெங்கட் இயக்கத்தில் ஜீவா, ரஜிஷா விஜயன் நடிக்கும் ‘தகப்பன்’ படம், மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறத்தை பின்னணியாகக் கொண்டு அப்பா-மகன் உறவு, குடும்ப பாசம், மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஆழமான கதையாக உருவாகிறது. அனுபவமிக்க சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் இசையமைக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியானது.

நடிகர் ஜீவா நடிப்பில் ரா. வெங்கட் இயக்கி வரும் படம் ‘தகப்பன்’. இந்தப் படத்தில் நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். படத்திற்கு, அனிருத் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் ( Marshall Robinson) இசையமைக்கிறார்.

‘தெனாவட்டு ’ திரைப்படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் ஜீவா நடிக்கும் திரைப்படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு ஆழமான குடும்பக் கதையாக உருவாகி வருகிறது.

Jiiva
”சூர்யா என்னுடன் சேர்ந்து சமைப்பார்!” - ஜோதிகா | Suriya | Jyotika

படத்தை ஒரே கட்டமாக படமாக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 50 சதவீத படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படத்தின் உணர்வுபூர்வமான கதைக்களத்தையும், கிராமத்து மண்வாசனையையும் பிரதிபலிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.  ‘தகப்பன்’ திரைப்படத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Jiiva
சாய் பல்லவிக்கு எதிராக தொடரும் ட்ரோல்ஸ்.. குரல் கொடுக்காத சினிமாத்துறை! | Ramayana | Sai Pallavi
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com