\
Vijay - Jason Sanjay
Vijay - Jason SanjaySigma

’அந்த வாய்ப்பு வந்தால் அப்பாவை அழைத்துச் செல்வேன்..’ - ஜேசன் சஞ்சய் பளீச் பதில்

அப்படி நான் பார்த்த படங்களில் நிவின் பாலியின் மூத்தோன் படமும் ஒன்று. அப்போது நான் அவரை சந்தித்து பேசினேன். அவருக்கு அது நினைவிருக்குமா தெரியவில்லை. ஆனால் அது ஒரு சிறப்பான அனுபவம்.
Published on
Summary

ஜேசன் சஞ்சய் சிறுவயதிலிருந்தே கதை சொல்லும் ஆர்வம் காரணமாக எழுத்து, இயக்கத்தில் ஈடுபட்டு, கனடாவில் திரைப்பட படிப்பு முடித்து விளம்பரப்படங்கள் மூலம் அனுபவம் சேர்த்ததாக கூறுகிறார். உலக சினிமா, குறிப்பாக நிவின் பாலியின் ‘மூத்தோன்’ படம் அவரை இயக்குநராக தீர்மானிக்கச் செய்தது. இந்தியா திரும்பி குழுவை அமைத்து ‘சிக்மா’ படத்தை உருவாக்கிய பயணத்தை பகிர்ந்துள்ளார்.

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள படம் `சிக்மா'. விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் ஜேசன் சஞ்சய் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் "எனக்கு சிறுவயதில் இருந்து ஒரு பழக்கம் இருக்கிறது, கதை சொல்வதில் பெரிய ஆர்வம். படத்தின் கதையாக தான் என்றில்லை, சாதாரணமாக ஏதாவது ஒரு கதை சொல்வது பிடிக்கும். பின்னர் எனக்கு வரக்கூடிய யோசனைகள் அனைத்தையும் எழுத ஆரம்பித்தேன். பின்பு தான் எனக்கு எழுத்தில் ஆர்வம் உள்ளது என புரிந்து, கனடாவில் திரைப்பட துறை பற்றிய படிப்பை படிக்க சென்றேன். அதுதான் எனக்கு என்ன ஆர்வம் உள்ளது என புரிந்து கொள்ள உதவியது. அங்கு நான் படித்துக் கொண்டிருக்கும் சமயத்திலேயே சில விளம்பரப்படங்களை இயங்கினோம். நான் இயக்குவேன் என் நண்பர்களே அதனை எடுத்து, எடிட் செய்வார்கள். கற்றுக்கொண்ட விஷயங்களை இப்படி பயிற்சி செய்தும் பார்த்துக் கொண்டோம்.

Jason Sanjay
Jason Sanjay

அதன் பிறகுதான் எனக்கு கேமரா பின்னால் பணியாற்றுவதில் ஆர்வம் என்பதை புரிந்து கொண்டேன். கூடவே அங்கு நடக்கும் திரைவிழாக்களில் உலக சினிமாக்கள் பார்த்ததும் என் ரசனையை மேம்படுத்தியது. அப்படி நான் பார்த்த படங்களில் நிவின் பாலியின் மூத்தோன் படமும் ஒன்று. அப்போது நான் அவரை சந்தித்து பேசினேன். அவருக்கு அது நினைவிருக்குமா தெரியவில்லை. ஆனால் அது ஒரு சிறப்பான அனுபவம். அதன் பின்னர் இயக்கம் தான் என முடிவு செய்தேன். அங்கிருந்து இந்தியா கிளம்பி வந்ததும் எனக்கு என ஒரு குழுவை அமைத்துக் கொண்டேன். அவர்களுடன் பேசி பேசி கதையை உருவாக்கினேன். அதன் பின்னர் தான் தயாரிப்பாளரை சந்தித்தேன்.

Vijay - Jason Sanjay
`Spider-Man: Brand New Day' to ஓடிடியில் `கட்டா குஸ்தி 2' இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்!

நான் ஒரு மிகப்பெரிய யுவன் ஃபேன். சிக்மா படத்தில் அவரும் ஒரு பாடல் பாடி இருக்கிறார். அதற்காக அவரை சந்தித்த போது கொஞ்சமாக தான் பேசினேன். ஆனால் யுவனின் போட்டோ போட்ட டி-ஷர்ட் சில வகையில் வாங்கினேன். அதை நான் அணிந்துள்ள புகைப்படத்தை என் அப்பாவிடம் சொல்லி யுவனுக்கு அனுப்ப சொன்னேன். நான் அவர் ரசிகர் என்பது முன்பே அவருக்கு தெரியும். ஆனால் முதன்முறை அவரை ஒரு இயக்குநராக தான் சந்தித்தேன்." என்று பேசியுள்ளார்.

அதேபோல ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டாதம் உங்களை ஹாலிவுட்டில் படம் செய்ய அழைத்தால், இங்கு இருந்து எந்த நடிகரை அழைத்து போவீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், ”அப்பா தான். இரண்டு பேருக்கும் நல்ல காம்பினேசனா இருக்கும். ஜேசன் ஸ்டாதம் இந்த இண்டர்வியூவை பார்க்கணும்னு நினைக்கிறேன்” என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com