”`ஜனநாயகன்' பட்டாசா இருக்கும்; `ஜெயிலர் 2' பாட்டு எல்லாம் ரெடி..” - அனிருத் தந்த அப்டேட் | Anirudh
தமிழ் சினிமாவின் பிஸியான இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். தற்போது முன்னணி நடிகர்கள் படங்கள் அனைத்துக்கும் இசை அனிதான்.
”தளபதி கட்சேரியின் வரவேற்புக்கு நன்றி”
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜனநாயகன் பற்றியும், ஜெயிலர் 2 பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்,
அதில் "ஜனநாயகன் பின்னணி இசை பணிகள் நடந்து வருகிறது. ஜனவரியில் படம் வெளியாகவுள்ளது. ரொம்ப மகிழ்ச்சியாக உள்ள அதே வேளையில், விஜய் சாரின் கடைசி படம் என்பதில் வருத்தம் இருக்கிறது. ஆனாலும் அதற்காக கூடுதல் உழைப்பை கொடுத்து வருகிறோம். தளபதி கட்சேரியின் வரவேற்புக்கு நன்றி. மலேஷியா ஆடியோ லான்ச் பெரிய கூட்டத்தில் திறந்த மைதானத்தில் நடக்க இருக்கிறது. நானும் விஜய் சாருக்கு ஒரு ட்ரிபியூட் தர இருக்கிறேன்.
”கடைசி ஆடியோ லான்ச்.. எங்களால் முடிந்த அளவிற்கு..”
இது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். வெறுமனே ஜனநாயகன் பாடல்களாக இல்லாமல், எங்கள் கூட்டணியில் உருவான சில பாடல்களை மெட்லியாக பாட போகிறேன். மலேசியாவில் எப்போதும் என் கான்செர்டே தெறிக்கும். கடைசி ஆடியோ லான்ச், எங்களால் முடிந்த அளவு சிறப்பாக செய்கிறோம். பட்டாசா இருக்கும். அரசன் நேற்றுதான் படப்பிடிப்பு துவங்கி இருக்கிறது. அதன் தீமுக்கு கொடுத்த வரவேற்புக்கு நன்றி. அது உருவாக்க ஒரு வருடம் ஆகிவிடும்.
கூலி நம்பர் 1 ஆல்பமாகவும், நம்பர் 1 பாடலாகவும் வந்ததில் பெரும் மகிழ்ச்சி. அதற்கு முன்பு ஜெயிலர் வந்தது. தொடர்சியாக இப்படி நடப்பதில் சந்தோசம். அடுத்த வருடமும் ஜெயிலர் 2வில் இப்படி நடக்க வேண்டும். அடுத்த வருடம் ஜெயிலர் 2வில் சந்திப்போம்.
ஜெயிலர் 2 பாடல்கள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். அடுத்த ஆண்டு நிறைய படங்கள் உள்ளது, சிறப்பாக இருக்கும். 14 வருடங்களில் 39 ஆல்பம் தான் செய்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு அன்பு, உலகம் முழுக்க வரவேற்பு கிடைக்கும் போது, இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும் என தோன்றுகிறது" எனப் பேசியுள்ளார் அனிருத்.

