\
Jana Nayagan Release Date Update
CM VijayJana Nayagan

வெளியான புத்தி போஸ்டர்.. உறுதியான ’ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி! | Jana Nayagan

இதற்காக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் THE HONOURABLE CHIEF MINISTER OF TAMIL NADU C JOSEPH VIJAY எனக் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Published on

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசிப் படமாக உருவானது ‘ஜனநாயகன்’. இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தது CBFC தரப்பு. அதனைப் படக்குழு மாற்றம் செய்த பின்னரும் சான்றிதழ் தருவதில் தாமதம் ஏற்பட, நீதிமன்றத்தை நாடியது படக்குழு. அதனை எதிர்த்து CBFC தரப்பும் நீதிமன்றத்தில் வாதிட்டது. கடைசியாக, படக்குழு தங்கள் வழக்கை வாபஸ் பெற்று, படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப ஒப்புக் கொண்டது.

பெரிய இடைவெளிக்குப் பிறகு ’ஜனநாயகன்’ படத்திற்கு ஜூலை 9ஆம் தேதி CBFCயிலிருந்து ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இன்று அதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனமான KVN. மேலும் இதற்காக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் THE HONOURABLE CHIEF MINISTER OF TAMIL NADU C JOSEPH VIJAY எனக் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் சூசகமாகச் சொன்னாலும், படம் ஜூலை 24ஆம் தேதி வெளியாகும் என அடித்துச் சொல்கிறது சினிமா வட்டாரம். மேலும், வெளிநாட்டில் இப்படத்தை வெளியிடும் அஹிம்சா நிறுவனம் ஜூலை 24 என போஸ்டர் வெளியிட்டு டிக்கெட் விற்பனையும் துவங்கிவிட்டார்கள். மேலும், படத்தின் புதிய ட்ரெய்லரும் வெளியாகும் எனச் சொல்லப்படுகிறது.

Jana Nayagan Release Date Update
எப்படி இருக்கிறது `இதயம் முரளி'யின் ஒரு தலை ராகம்? | Idhayam Murali Review | Atharvaa
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com