\
Jana Nayagan Box Office
Jana NayaganBox Office

இணையத்தில் கசிந்தும் வசூலில் கலக்கும் ஜனநாயகன்... முதல் நாள் வசூல் தெரியுமா? | Jana Nayagan

விமர்சன ரீதியில் படம் சார்ந்து கலவையான கருத்துக்களே இருந்தாலும் வசூல் ரீதியில் சாதனை செய்துள்ளது.
Published on
Summary

ஹெச்.வினோத் இயக்கத்தில், முதல்வர் விஜயின் கடைசி படமாக வெளியான ‘ஜனநாயகன்’, சிபிஎஃப்சியின் சான்றிதழ் சிக்கலால் ஏழு மாத தாமதத்திற்கு பின் ஜூலை 23 அன்று திரையரங்குகளை வந்தடைந்தது. இணையத்தில் முன்கூட்டியே கசிந்திருந்தாலும், ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் வரவேற்று, கலவையான விமர்சனங்களையும் மீறி, வசூலில் சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசிப் படமாக உருவானது ‘ஜனநாயகன்’. இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. CBFCயிலிருந்து சான்றிதழ் வருவதில் சிக்கல்கள் ஏற்பட, அந்த தடைகளை எல்லாம் கடந்து ஏழு மாதங்களுக்கு பின் நேற்று (ஜூலை 23) வெளியானது.

jana nayagan
jana nayaganweb

முதல்வர் விஜயின் கடைசி படம் என்பதால், ஏகப்பட்ட ரசிகர்கள் இப்பட வெளியீட்டை பெரிய அளவில் கொண்டாட்டமாக எடுத்துக் கொண்டனர். விமர்சன ரீதியில் படம் சார்ந்து கலவையான கருத்துக்களே இருந்தாலும் வசூல் ரீதியில் சாதனை செய்துள்ளது. இத்தனைக்கும் இப்படம் பல மாதங்கள் முன்பே இணையத்தில் கசிந்தது. ஆனாலும் இப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Jana Nayagan
Jana Nayagan
Jana Nayagan Box Office
எப்படி இருக்கு தளபதி கச்சேரி? | Jana Nayagan Review | Vijay | H Vinoth

இப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து விசாரிக்கும் போது, இந்திய அளவில் 41 கோடி (Net) மற்றும் 48.27 (Gross) என சொல்லப்படுகிறது. வெளிநாடுகளில் இப்படத்தின் வசூல் 30 கோடி (Gross) எனவும் தகவல். எனவே இதன் அடிப்படையில் ஜனநாயகன் படத்தின் உலகளவிலான முதல் நாள் வசூல் 78.27 கோடி (Gross) ஆக உள்ளது.

Jana Nayagan Box Office
நிறம் மாறும் சினிமா 1 | வணிக சினிமா நாயகரால் இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது எப்படி?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com