Is Ustaad Bhagat Singh remake of Theri? says Harish Shankar
Harish Shankar Ustaad Bhagat Singh

'தெறி’ பட ரீமேக்கா.. பவன் கல்யாண் பட இயக்குநர் பதில்! | Theri | Ustaad Bhagat Singh

இதில் ஹீரோ ஒரு போலீஸ், அநீதிக்கு எதிராகப் போராடும் போலீஸ் பாத்திரம் தெறியில் இருக்கலாம், டெம்பரில் இருக்கலாம், கப்பர் சிங்கில் இருக்கலாம்.
Published on

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யாண். இவர் நடிப்பில் ஹரீஸ் ஷங்கர் இயக்கியுள்ள படம், `உஸ்தாத் பகத் சிங்'. இப்படம் மார்ச் 26 வெளியாகவுள்ள நிலையில், படம் தொடர்பான பேட்டி ஒன்றை அளித்துள்ளார் இயக்குநர் ஹரீஸ் ஷங்கர். `உஸ்தாத் பகத் சிங்' படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, இப்படம் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிய `தெறி' படத்தின் ரீமேக் என்றே தகவல்கள் உலவின.

Harish Shankar
Harish Shankar

இந்தப் பேட்டியில், ’’இப்படம் `தெறி' படத்தின் ரீமேக் என சொல்கிறார்களே அது உண்மையா?’’ எனக் கேட்கப்பட, "இதே கேள்வியை முன்பு ஒருமுறை கேட்டபோது, நான் பதில் சொல்ல மாட்டேன் எனக் கூறினேன். எதனால் என்றால், ஒரு படம் எனக்குப் பிடித்து அதனை நான் ரீமேக் செய்கிறேன் என்றால், அதை ரீமேக் எனச் சொல்லி, வசனங்கள், மாற்றம், இயக்கம் என தான் டைட்டில் கார்டில் போடுவேன். `கப்பர் சிங்' படத்தில்கூட அதனைப் போடவே செய்தேன்.

Is Ustaad Bhagat Singh remake of Theri? says Harish Shankar
மீண்டும் வக்கீல் ரோலில் நடிக்கும் வடிவேலு! | Vadivelu | Pormuzhakam

இவ்வளவு தெளிவாக இருக்கும் நான், ஒருவேளை இது ரீமேக் ஆக இருந்தால் இதில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என என்னுடைய பெயரை ஏன் போடப் போகிறேன். இதில் ஹீரோ ஒரு போலீஸ், அநீதிக்கு எதிராகப் போராடும் போலீஸ் பாத்திரம் ’தெறி’யில் இருக்கலாம், டெம்பரில் இருக்கலாம், கப்பர் சிங்கில் இருக்கலாம்.

தெறி திரைப்படம்
தெறி திரைப்படம்web

இன்னும் சொல்லப்போனால், ’தெறி’ படத்தில் ரவுடிகளிடம் ரைம்ஸ் சொல்லச் சொல்லும் காட்சி என்னுடைய `கப்பர் சிங்' படத்திலிருந்து இன்ஸ்பையர் ஆனது. என் படக் காட்சியைப் பயன்படுத்திய ஒரு படத்தை நான் எதற்கு ரீமேக் செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

Is Ustaad Bhagat Singh remake of Theri? says Harish Shankar
" 'தெறி' படத்துல வில்லனா நடிக்க வேண்டியது இவர்தான்.." - தாணு சொன்ன ரகசியம் | Theri | Vijay

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com