\
Vishwanath & Sons
Vishwanath & SonsVishwanath & Sons

வசூலில் மிரட்டும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்'.. 2 நாட்களில் ரூ.100 கோடி வசூல்!

சூர்யாவின் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் 2 நாட்களில் ரூ.100 கோடி வசூல் ஈட்டியிருப்பதாக படக்குழு வெளியிட்டுள்ளது.
Published on
Summary

அதிரடி, ஆக்ஷன் படங்கள் தொடர்ச்சியாக வந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு குடும்ப கதைக்களத்துடன் வந்த சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ரசிகர்களை கவர்ந்துள்ளது. வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்துள்ளது. கருப்பு 300 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், இந்த வெற்றி சூர்யா ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்துள்ளது.

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். சூர்யாவுடன் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

குடும்ப உறவுகளின் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் மீது சூர்யா ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்ப்பு நிலவிவந்தது. படத்தின் பாடல்கள், டீசர்ட், ரெய்லர் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

Suriya sung a song for Vishwanath & Sons
SuriyaVishwanath & Sons

இந்நிலையில் படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. சமீபத்தில் தொடர்ச்சியாக வெட்டு, குத்து என அதிரடி, ஆக்சன் படங்களே தொடர்ச்சியாக வந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு குடும்ப மைய கதைக்களத்துடன் இறங்கியிருக்கும் விஸ்வநாதன் & சன்ஸ் படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அது திரைப்படத்தின் வசூலிலும் பிரதிபலித்துள்ளது. சூர்யா நடிப்பில் வெளிவந்திருக்கும் விஸ்வநாதன் & சன்ஸ் ரிலீஸான இரண்டே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கருப்பு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், விஸ்வநாதன் & சன்ஸ் திரைப்படமும் 100 கோடியை ஈட்டியுள்ளது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Vishwanath & Sons
’என்னை கொலை பண்ணிடுங்க..’ கெஞ்சி கேட்ட ஜி.பி.முத்து! தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com