\
I want to quit cinema says Nivetha Pethuraj
Nivetha PethurajSing Geetham

"சினிமாவிலிருந்து விலக நினைத்தேன்!" - உண்மையை உடைத்த நிவேதா பெத்துராஜ் | Nivetha Pethuraj

நாக் இல்லை என்றால் நான் இங்கு இருந்திருக்க மாட்டேன், ஏதோ இமயமலைபோல எங்காவது தியானம் செய்துகொண்டிருப்பேன்.
Published on

சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் உருவாகி ஜூன் 12ஆம் தேதி வெளியான படம் `சிங் கீதம்'. இப்படத்துக்கு திரையரங்கில் பெரிய வரவேற்பு கிடைத்து வெற்றியடைந்தது. இப்படத்தில் முக்கியமான பாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார், நிவேதா பெத்துராஜ். இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது, இதில் பேசிய நிவேதா பெத்துராஜ். "2023இல் நான் சினிமாவிலிருந்து விலகிவிடலாம் என முடிவு செய்தேன். தவறான முடிவுகள் எடுத்தாலும்கூட வாழ்க்கை என்னை சிங்கீதம் ஸ்ரீனி வாசராவின் ப்ளாக்பாஸ்டர் படத்தில் ஒரு பாகமாக மாற்றி இருக்கிறது. 

இதற்காக நான் நாக் அஷ்வினுக்கு நன்றி சொல்ல வேண்டும். என்னை வாழ்க்கையை நோக்கி மீண்டும் அழைத்து வந்ததற்கு நன்றி. நாக் இல்லை என்றால் நான் இங்கு இருந்திருக்க மாட்டேன், ஏதோ இமயமலைபோல எங்காவது தியானம் செய்து கொண்டிருப்பேன். நான் வேறு ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க நினைத்தேன். ஆனால், துவங்கிய இடத்துக்கே பெரிய வெற்றியோடு திரும்ப வந்திருக்கிறேன். நான் இந்தப் படத்தைப் பார்த்தபோது கண் கலங்கினேன். ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போது பூமியில் புதிய மரக் கன்றுகளை நடுவது பெரிய மாறுதலைக் கொடுக்கும். டிஎஸ்பி சார்... நீங்கள் அருமையாக வேலை செய்திருக்கிறீர்கள். அனில் சார் இங்கு வந்ததற்கு நன்றி, உங்களின் அடுத்த பட ரிலீசுக்கு காத்திருக்கிறேன். இந்தப் படகுழுவோடு வேலை செய்தது மறக்க முடியாதது" என்றார்.

I want to quit cinema says Nivetha Pethuraj
ஓடிடி தளங்களில் படத்தை விற்பது சவாலாக இருக்கிறது! - பா இரஞ்சித் | Pa Ranjith | Dark
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com