"ரன் படத்தில் விஜய் சார் ஏன் நடிக்கலன்னா.." - லிங்குசாமி சொன்ன தகவல் | Lingusamy | Run
மாதவன், மீரா ஜாஸ்மின், அதுல் குல்கர்னி நடிப்பில் லிங்குசாமி இயக்கிய படம் `ரன்'. இப்படம் ஜூலை 10ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இது குறித்து லிங்குசாமி செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில் விஜயுடன் இணைந்து படம் செய்ய வாய்ப்பு அமையவில்லையா என கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன லிங்குசாமி "இந்தப் படமே (ரன்) சாருக்கு செய்வதற்காக AVM மிலிருந்து அனுப்பி வைத்தார்கள். SAC சாரை சந்தித்து கதையை கூறினேன். அப்போது விஜய் சாருடைய பட வரிசைகளில் திட்டம் வேறாக இருந்தது. "தமிழன் என்ற படத்தில் தம்பி நடிக்கிறார். ஒரு பொண்ணு பின்னால் சுற்றுகிற கதை இந்த சமயத்தில் சரி வராது" என சொல்லி SAC சார் மறுத்துவிட்டார்.
அதன் பிறகு சண்டக்கோழியும் மிஸ் ஆனது. வேட்டை செய்ய வேண்டியது அதுவும் மிஸ்ஸானது. அது என்னவோ சரியாக அமைந்து வரவில்லை. அதை ஜாலியாக கிண்டல் செய்து அவரை சந்திக்கும் போது `படம் தான் செய்ய முடியவில்லை, ஒரு வார்டு கவுன்சிலராவது' என்று சொல்வேன். அண்ணா `சும்மா இருங்கணா' என்பார். சினிமாவில் அவருடன் கனெக்ட் ஆகவில்லை என்றாலும், அவரின் இப்போதைய முன்னெடுப்புகளில் நான் ஆதரவாக இருக்கிறேன். அவர் கட்சியில் நான் சேரவில்லை இல்லை என்றாலும், நான் அவர் கட்சி தான்.
மாநாடு நடத்திய பிறகு கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துக்கு அவர் வந்த போது சந்தித்தேன். மாலை சந்தித்து பேசுவோம் என்றார். 10 நிமிடம் தான் இருக்கும் என நினைத்து சென்றேன், 1 மணிநேரம் பேசினோம். அப்போதே CM ஆனா பின்பு என்னென்ன செய்யலாம் என்பது குறித்து பேசினோம்." என்றார்.

