\
I scared to act with Selva sir says Pavish
PavishLove Oh Love

தனுஷ் சாருக்கு நன்றி... செல்வா சார்னா பயம்! - பவிஷ் | Pavish | Love Oh Love

இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் ஒரு காபி ஷாப்பில் தான் கூறினார். பயங்கரமாக சிரித்து அதனை கேட்டேன், சுற்றி இருப்பவர்கள் என்னை ஒரு மாதிரி பார்க்க துவங்கிவிட்டனர். அவர் சிறப்பான கதை சொல்லி, படமும் நன்றாக வந்திருக்கிறது.
Published on

பவிஷ், நாகதுர்கா நடிப்பில் உருவாகியுள்ள படம் `லவ் ஓ லவ்'. இப்படம் ஜூலை 10ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய பவிஷ் "என்னுடைய எந்த மேடையானாலும் என் முதல் நன்றி தனுஷ் சாருக்கு தான். என் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்கள் எல்லாமே அவரால் தான். அதன் பிறகு என்னை கவனித்து, நன்றாக பார்த்து கொண்ட தினேஷ் மற்றும் தனஞ்செயன் சாருக்கு நன்றி. ஒரு குடும்பம் போல் உடனிருந்து ஆதரவு தந்தார்கள்.

இந்தப் படத்தின் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் ஒரு காபி ஷாப்பில் தான் கூறினார். பயங்கரமாக சிரித்து அதனை கேட்டேன், சுற்றி இருப்பவர்கள் என்னை ஒரு மாதிரி பார்க்க துவங்கிவிட்டனர். அவர் சிறப்பான கதை சொல்லி, படமும் நன்றாக வந்திருக்கிறது. இப்படம் மூலமாக நிறைய இயக்குநர்களை சந்தித்தேன். கே எஸ் ரவிக்குமார் சாருடன் பணியாற்றி இருக்கிறேன். அவர் நிறைய விஷயங்கள் கற்று தந்திருக்கிறார். அவற்றை எல்லாம் இனி வரும் படங்களிலும் பயன்படுத்துவேன்.

அடுத்தது செல்வா சாருடன் இணைந்து நடித்த அனுபவம். அவருடன் நடிக்க முதலில் பயந்தேன். அதன் பிறகு சகஜமாக நடிக்க ஆரம்பித்துவிட்டேன். இந்தப் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் அபிஷேக். அவர் வந்தாலே நான் ஜாலியாகிவிடுவேன். எனக்கு எவ்வளவு வேலையை கம்மி பண்ண முடியுமோ, அவ்வளவு கம்மி பண்ணி கொடுப்பார். இந்தப் படம் நல்ல வெற்றி பெரும் என நம்புகிறேன்" என்றார்.

I scared to act with Selva sir says Pavish
விளையாட்டு துறையின் அவலங்களை பேசும் அங்கீகாரம்! | Angikaaram Review | K J R
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com