I said not to cast Ken in Asuran says Dhanush
Dhasnuh, Ken KarunasYouth

" 'அசுரன்' படத்தில் கென் வேண்டாம்..." - தனுஷ் சொன்ன ரகசியம் | Dhanush | Youth | Ken Karunas

முன்பெல்லாம் நமக்கு முன்னால் வந்த நடிகர்களை பார்த்து கற்றுக் கொள்ள நினைப்போம். இப்போதெல்லாம் அடுத்து வரும் தலைமுறையினரைப் பார்த்து நேரத்தை வீணாக்கக் கூடாது என்பதை கற்க வேண்டும்.
Published on

கென் கருணாஸ் இயக்குநராகவும்,  ஹீரோவாகவும் அறிமுகமாகும் `யூத்' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் தனுஷ் பேசிய போது, "இந்தப் படத்துக்கு முதல் பாராட்டுக்குரியவர் இப்படத்தின் தயாரிப்பாளர் கருப்பையா. என்னதான் கென் திறமைசாலியாக இருந்தாலும், 23 வயது பையனை நம்ப தைரியம் வேண்டும். அந்த தைரியம், நம்பிக்கைக்குப் பாராட்டுகள். கருப்பையா என்றால் பெரிய ஆள் என நினைத்தால் அவரும் இளைஞர்தான். நாளை இந்தப் படம் எவ்வளவு பெரிய வெற்றி என்றாலும், அந்த நன்றியை கென் எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும்.

கருணாஸ் - க்ரேஸிடம் ஒரு பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் எனக் கற்றுக் கொள்ளலாம். நல்ல மனதிற்கும் பையனை வளர்ப்பது கஷ்டம். அப்படி ஒரு பிள்ளையை வளர்த்திருக்கிறீர்கள். குடும்பப் பொறுப்பையும் கையில் எடுக்கும் பிள்ளையாக இருக்கிறான், எப்போது அப்படி ஒரு பிள்ளை வருகிறானோ, அவனுக்கு வெற்றி நிச்சயம் காத்திருக்கும்.

Asuran
Asuran

எல்லோருக்கும் இருக்கும், ஆனால் கொடுக்க மனது வேண்டும். என்னதான் கென் என் மூலமாக உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், கருணாஸ் கேட்டிருந்தாலும் படத்துக்கு இலவசமாக பணியாற்ற ஒரு மனது வேண்டும். உங்களுக்கு அந்த மனது இருக்கிறது. `துள்ளுவதோ இளமைக்கு' எப்படி யுவன் ஒரு விலாசமாக இருந்தாரோ, அப்படி நீங்கள் இந்த `யூத்' படத்துக்கு விலாசமாக இருக்கிறீர்கள்.

I said not to cast Ken in Asuran says Dhanush
`இந்தியன் 3'யா, `வேள்பாரி'யா... ஷங்கரின் முடிவு என்ன? | Shankar | Indian 3 | Velpari

`சிதம்பரம் நம்மகிட்ட படிப்பு இருந்தா எடுத்துக்கவே முடியாது' எனச் சொன்னதுக்கு, அதைத் தவிர நீ எல்லாமே செய்திருக்கிறாய். கென்னை ’அசுரன்’ போட்டோ ஷூட் சமயத்தில்தான் முதன்முறை பார்த்தேன். எனக்குச் சுத்தமாக செட் ஆகும் என தோன்றவில்லை. உடனே வெற்றியைக் கூப்பிட்டு, ’வெற்றி.. இந்தப் பையன் வேண்டாம்; வேறு யாரையாவது பாருங்கள்’ என்றேன். ’இவன் உருண்டையாக இருக்கிறான்’ எனச் சொன்னேன். ’இல்லை, அவன் இளைத்து வருவான்’ என வெற்றி கூறினார். பிறகு, ’அசுரன்’ படப்பிடிப்பில்தான் பார்த்தேன். அவன் நடித்ததைப் பார்த்ததும்.. வெற்றியிடம், ’இவனிடம் ஏதோ இருக்கிறது’ எனக் கூறினேன். கென்னை கண்டுபிடித்த பெருமை முழுக்க முழுக்க வெற்றிமாறனுக்குத்தான்.

கென் என்னுடைய பப்ஜி ஃப்ரெண்ட். அவனுடன் எப்படியாவது க்ளோஸ் ஆக வேண்டும் என அவனுடன் விளையாடுவேன். அப்படிதான் அவன் என்னுடன் நெருக்கமானான். அதன்பின் ’அசுரன்’ வந்தது. கென் இந்தப் படம் பற்றி என்னிடம் வந்து சொன்னபோது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ’இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாம்; சின்ன வயதில் ஏன்’ எனக் கேட்டேன். ’இல்ல சார், எடுத்துவிடுவேன்’ என நம்பிக்கையாகக் கூறினான்.

I said not to cast Ken in Asuran says Dhanush
"எனக்கு கல்லூரி வாழ்க்கை கிடைக்கவில்லை..." - ஏக்கத்தோடு சொன்ன தனுஷ் | Dhanush

அவ்வளவு நம்பிக்கையாகக் கூறும் பையனை மதிக்க நினைத்தேன். ஆனால், இவ்வளவு அழகாக படத்தை எடுப்பான் என நான் அன்று நினைக்கவில்லை. எப்படி ’அசுரன்’ படத்தின்போது இந்த பையன் வேண்டாம் எனச் சொன்னது தப்பானதோ, அதேபோல் இந்தப் படத்தை எடுத்துவிடுவானா என்ற என் சந்தேகமும் தப்பானதில் எனக்கு ரொம்ப சந்தோசம்.

தனுஷ்,
தனுஷ்,கோப்புப் படம்

முன்பெல்லாம் நமக்கு முன்னால் வந்த நடிகர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள நினைப்போம். இப்போதெல்லாம் அடுத்து வரும் தலைமுறையினரைப் பார்த்து நேரத்தை வீணாக்கக் கூடாது என்பதைக் கற்க வேண்டும். இவர்களைப் பார்க்கும்போது நான் நிறைய நேரத்தை வீணாக்கிவிட்டேனோ எனத் தோன்றுகிறது. கென் என் மகன் மாதிரி, மாதிரி எனச் சொல்வேன், `லப்பர் பந்து' படத்தில், ’அதென்னா மாதிரி, இல்லைனு கூட சொல்லுங்க.. மாதிரின்னு சொல்லாதீங்க' என ஒரு வசனம் வரும். கென் என் மகன்தான். இந்த ’யூத்’ படம் மாபெரும் வெற்றியடைவே வேண்டிக் கொள்கிறேன்" என்றார்.

I said not to cast Ken in Asuran says Dhanush
"D56 ஃபேண்டஸி படம்... தனுஷ் சார் சொன்ன விஷயம்!" - மாரி செல்வராஜ் அப்டேட்.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com