"De-aging காட்சி பிடித்தது, ஆனால் படம்..." - `கூலி' பற்றி சௌந்தர்யா ரஜினிகாந்த் | Coolie | Rajini
நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். ரஜினியின் நடிப்பில் அனிமேஷன் படமாக உருவான `கோச்சடையான்', தனுஷ் நடித்த `வேலையில்லா பட்டதாரி 2' படங்களை இயக்கிய இவர், வெங்கட்பிரபு இயக்கிய `கோவா' படத்தை தயாரித்தார். தற்போது, இவர் MRP நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள படம் `வித் லவ்'. இப்படத்தின் புரமோஷனுக்கு பல பேட்டிகளை அளித்து வருகிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவரின் தந்தை ரஜினிகாந்த் நடித்த `கூலி' படம் பற்றிய தன் கருத்துக்களை முன்வைத்துள்ளார். இது பற்றி சௌந்தர்யா பேசும் போது "நான் அப்பாவோட ரசிகை, அப்பாவோட ரசிகையாக, அவருடைய படங்களில் அவரின் எல்லா பெருமைகளும் வெளிபடுவதை பார்க்கப் போறேன். கடைசி 10 நிமிடங்கள் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.
De-aging காட்சிகளும், அந்த `சீவிடுவேன்' என சொல்லும் ஸ்டைல், பாவனை எல்லாம் எனக்கு வெகுவாக பிடித்திருந்தது. ஆனால் ஒரு தலைவர் ரசிகையாக, அந்தப் படத்தில் அவரை இன்னும் நிறைய பார்க்க வேண்டும் என நினைத்தேன். எனக்குப் படம் பிடித்திருந்ததா என்றால் ஆம், ஆனால் இது அப்பா நடித்த படங்களில் மிகவும் எனக்கு பிடித்த டாப் படங்களில் ஒன்றா எனக் கேட்டால், இல்லை என சொல்லலாம்." என்றார்.

