I Changed the opening and Climax scene of Puthiya Geethai says Jagan
KP JaganPuthiya Geethai

" `புதிய கீதை' படத்திற்கு எஸ்ஏசி சாரின் ரெண்டு கண்டிஷன்!" - ஜெகன் சொன்ன சுவாரஸ்யம் | Vijay

இந்தப் படத்தின் கதையை விஜய் சாருக்கு சொல்லும் முன்பே, அவரது அப்பா எஸ்ஏசி சாருக்கு சொல்லி இருந்தேன். ஆனால் அவர் பிடிக்கவில்லை எனச் சொல்லிவிட்டார்.
Published on

விஜய் நடிப்பில் உருவான `புதிய கீதை' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கே.பி.ஜெகன். சமீபத்திய பேட்டியில் இப்பட உருவாக்கத்தில் செய்த மாற்றங்கள் குறித்து தெரிவித்திருந்தார், ஜெகன். அதில், "இந்தப் படத்தின் கதையை விஜய் சாருக்கு சொல்லும் முன்பே அவரது அப்பா எஸ்ஏசி சாருக்கு சொல்லி இருந்தேன். ஆனால் அவர் பிடிக்கவில்லை எனச் சொல்லிவிட்டார். பின்னர் ஒளிப்பதிவாளர் பிரியன் சார் மூலம் விஜய் சாரை சந்தித்து கதை சொல்ல நேரம் கேட்டேன், கூடவே இதை எஸசி சாருக்கு சொன்னதையும், அவர் பிடிக்கவில்லை என சொன்னதையும் சொல்லிவிட்டேன். ஒருநாள் கதை சொல்ல அழைத்தார், கேட்டுவிட்டு `நான் சொல்றேன்' எனச் சொன்னார்.

Puthiya Geethai
Puthiya Geethai

மறுநாள் எஸஏசி சாரை சந்திக்குமாறு சொன்னார்கள். அவர் என்னைப் பார்த்ததும் `ஜெகன்.. நீங்கள் என்னிடம் சொன்ன கதை இல்லையே' என்றார். ’அதே கதைதான், கொஞ்சம் மாற்றி இருக்கிறேன்’ எனக் கூறினேன். படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு பெரிய பாலத்தில் சென்னையின் மேயர் கான்வாயில் வருகிறார். ஆனால் பாலத்தில் ஓர் இறுதி ஊர்வலம் செல்வதால் முழுக்க டிராஃபிக் ஜாம். அப்போது மேயர்ஒ, ‘இறந்துபோனது அரசியலவாதியா, சினிமா நடிகரா‘ எனக் கேட்பார், அங்குள்ள ஒருவர், ’அவன் ஒரு நல்லவன் சார்’ என்பார்.

I Changed the opening and Climax scene of Puthiya Geethai says Jagan
"சிவா படத்துக்கு இசையமைக்காத காரணம்.." - சந்தோஷ் நாராயணன் விளக்கம் | SK | Santhosh Narayanan

இடுகாட்டில் அவனைப் புதைக்க மக்கள் கூடி அவர்கள் போடும் மண்ணிலேயே குழி மூடிவிடும். பின்னர் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் ’சாரதி’ என ஹீரோ புகைப்படத்தை காட்டுவோம் என்றுதான் எழுதி இருந்தேன். இதே ஓப்பனிங்கைதான் விஜய் சாரிடமும் கூறினேன். அவர் எதுவும் சொல்லவில்லை.

KP Jagan
KP JaganPuthiya Geethai

கதை முழுவதையும் கேட்ட எஸ்ஏசி, ’அன்று சொன்ன கதைதானே’ என்றார். ’இல்லை சார், உள்ளே சில மாற்றி இருக்கிறேன்’ என்றேன். அவர், என்னிடம் இரண்டு கண்டிஷன்தான் வைத்தார். படத்தில் முதல் காட்சியில் விஜய் சாவதுபோல வைக்கக்கூடாது. இன்னொன்று படத்தில் விஜய் சாகக்கூடாது. எனவே அதற்கான மாற்றங்களைச் செய்துதான் படத்தை எடுத்தேன" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com