\
Ramya Ranganathan
Ramya RanganathanAnbe Diana

தனுஷ் சாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்! - ரம்யா ரங்கநாதன் | Ramya Ranganathan | Anbe Diana

‘ஜமா’ படத்தை பார்த்தபோதே உங்கள் திறமையை மிகவும் ரசித்தேன். இந்தப் படத்தின் மூலம் உங்களுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.
Published on

பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள `அன்பே டயானா' ஜூலை 17ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய ரம்யா ரங்கநாதன் “முதலில் தனுஷ் சாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். என்னுடைய திறமையை கண்டுபிடித்து வாய்ப்பளித்தார். அதற்கு நான் எப்போதும் நன்றியோடு இருப்பேன். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடைய படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற தரமான படங்களின் வரிசையில் `அன்பே டயானா' என சொல்லும் போதே சந்தோஷமாக இருக்கிறது. அந்தப் படங்கள் எப்படி இருந்தது என நாம் பார்த்திருக்கிறோம். அது போல இதுவும் பெரிய ஹிட் ஆக வேண்டும்.

பாரி இளவழகனுக்கு நன்றி சொல்ல வேண்டும். என்னுடைய திறமையை நம்பி, ‘அன்பே டயானா’ படத்தில் டயானா கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்தார். இந்தக் கதாபாத்திரம் என் திரைப்பயணத்தில் எப்போதும் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும். நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர், திறமையான இயக்குநர், அற்புதமான நடிகர். ‘ஜமா’ படத்தை பார்த்தபோதே உங்கள் திறமையை மிகவும் ரசித்தேன். இந்தப் படத்தின் மூலம் உங்களுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.

Ramya Ranganathan
"ஹீரோயின் படம் யார் பார்ப்பாங்கனு கேட்டாங்க.." - மாஸ் ஹிட் கொடுத்த சமந்தா பதிவு | Samantha

ரோஜா மேடத்துடன் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். சிறு வயதிலிருந்தே அவருடைய ரசிகை நான். திரையில் மிகவும் கம்பீரமாகத் தோன்றினாலும், நேரில் மிகவும் அன்பான, இனிமையான மனிதர். குறிப்பாக அவரது சிரிப்புக்கு நான் பெரிய ரசிகை. அவருடன் நடித்த ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. வெளியே தான் அவர் மிகவும் டஃப் ஆனா ஆள் போல் தெரிகிறார். ஆனால் மிகவும் மென்மையான நபர்.

‘அன்பே டயானா’ எனக்கு ஒரு நடிகையாக நிறைய உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை கொடுத்த திரைப்படம். டயானா கதாபாத்திரத்தில் என்னால் முடிந்த அளவுக்கு முழு அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறேன். அந்த நடிப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படம் பெரம்பூரின் கலாச்சாரத்தையும், குறிப்பாக ஆங்கிலோ-இந்திய சமூகத்தின் வாழ்க்கை முறையையும் மிகவும் அழகாக பதிவு செய்துள்ளது. அவர்கள் எவ்வளவு அன்பானவர்கள், முன்னேற்ற சிந்தனை கொண்டவர்கள் என்பதை இந்தப் படம் சொல்லும். ‘அன்பே டயானா’ ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படம். இந்தப் படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com