\
I acted in this film despite of me being ill says Vadivukkarasi
VadivukarasiCon City

”உடல்நலப் பிரச்னை இருந்த போதும் நடித்தேன்!” - வடிவுக்கரசி | Vadivukarasi | Con City

ஜாலியாக ஒரு படம் என்றதும் சந்தோஷமாக இருந்தது. காட்சியை விவரிக்க ஒருவர் வருவார், அவர் வாசிக்கும்போது சிரிக்கக்கூட மாட்டார். ஜாலியாக படம் செய்யலாம் என்று சொல்லி சிரிக்கக்கூட மாட்டார்கள்.
Published on

அர்ஜூன் தாஸ் உடன் இணைந்து, அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `கான் சிட்டி'. இப்படம் ஜூன் 26ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய வடிவுக்கரசி, “இந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகியபோது இயக்குநர் ஹரிஷ் மிகவும் நேர்மையாகப் பேசினார். ‘இந்தக் கதாபாத்திரத்தை உங்களை மனதில்வைத்து எழுதவில்லை, ஆனால் இப்போது நீங்கள் இதைச் செய்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்று வெளிப்படையாகச் சொன்னார். அந்த நேர்மை எனக்கு மிகவும் பிடித்தது. அதன்பிறகு, அவரது அலுவலகத்தில் அமர்ந்து முழுக் கதையையும் கேட்டேன். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவர் மிகுந்த ஆர்வத்துடனும் உணர்வுடனும் கதையை விவரித்தார். கதையைக் கேட்டவுடன்  பயங்கரமாகச் சிரித்து, ரசித்து மகிழ்ந்து கேட்டேன். இந்தப் படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

ஜாலியாக ஒரு படம் என்றதும் சந்தோஷமாக இருந்தது. காட்சியை விவரிக்க ஒருவர் வருவார், அவர் வாசிக்கும்போது சிரிக்கக்கூட மாட்டார். ஜாலியாக படம் செய்யலாம் என்று சொல்லி சிரிக்கக்கூட மாட்டார்கள். 47 வருடங்களாக நான் நடித்த நடிப்பை அப்படியே மாற்றி புதிதாக வடிவமைத்தனர். மற்ற நடிகர்கள் வசனம் பேசுவதுகூட எதுவும் கேட்காது. இந்த பசங்களை நம்பி வந்து மாட்டிக் கொண்டோமோ என்று நினைத்தேன்.

I acted in this film despite of me being ill says Vadivukkarasi
"இறந்துபோன என் நண்பனுக்காக இந்தப் பாடல்.." - அனிருத் | Anirudh | Aravind

எனக்கு உடல்நலப் பிரச்னைகள் இருந்தபோதும் இந்தப் படத்தில் நடித்தேன். படப்பிடிப்பு முடிந்த மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அந்தக் காலகட்டத்திலும் படக்குழுவினர் என்மீது காட்டிய அக்கறையை நான் மறக்க முடியாது. இவர்கள் என்னைப் பிழிந்து வேலை வாங்கினார்கள் என்றுகூடச் சொல்லமாட்டேன்.

Vadivukarasi
VadivukarasiCon City

ரொம்பவும் கம்மி வேலைதான், அதனால்தான் எனக்கு சம்பளத்தை அளவாகப் பேசிவிட்டார்கள். எனக்கு ஒரே ஒரு விஷயம்தான், இயக்குநர் முன்பு என் வேடத்தில் நடிக்கவைக்க நினைத்த நடிகையைவிட நான் நன்றாக நடித்திருக்கிறேனா, இல்லையா என்பதை மட்டும் கூறுங்கள். இயக்குநர் ஹரிஷ் மற்றும் முழுப் படக்குழுவினரின் உழைப்புக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைத் தர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com