\
I dedicated this song to my friend says Anirudh
AnirudhAravind

"இறந்துபோன என் நண்பனுக்காக இந்தப் பாடல்.." - அனிருத் | Anirudh | Aravind

'ஒய் திஸ் கொலவெறி டி' பாடலின் வெற்றியின்போது இதே இடத்திற்கு வந்தேன். அன்று ஒரே இரவில் என் வாழ்க்கை மாறியது பற்றி உங்களுக்குத் தெரியும். இந்த 15 வருடத்தில் 40+ படங்களுடைய ஆல்பம், பின்னணி இசைக்கு நீங்கள் தந்த அன்புக்கு நன்றி.
Published on

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ‘வைப் வித் அரவிந்த்’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நேற்று மாலை நிகழ்த்தினார். இதில் அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் முதல் டிராக்கான 'அரவிந்த்' மற்றும் தனது சில பாடல்களையும் பாடினார். இந்தப் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் உற்சாகமாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பேசிய அனிருத், "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு உலகளவில் டிரெண்டான 'ஒய் திஸ் கொலவெறி டி' பாடலின் வெற்றியின்போது இதே இடத்திற்கு வந்தேன். அன்று ஒரே இரவில் என் வாழ்க்கை மாறியது பற்றி உங்களுக்குத் தெரியும். இந்த 15 வருடத்தில் 40+ படங்களுடைய ஆல்பம், பின்னணி இசைக்கு நீங்கள் தந்த அன்புக்கு நன்றி. தற்போது எனது சுயாதீன இசை நிறுவனமான அல்புகெர்கி ரெக்கார்ட்ஸின் முதல் வெளியீடான 'அரவிந்த்’தை கொண்டாட இதே இடத்திற்கு மீண்டும் வந்துள்ளது சிறப்பான தருணம். எனது நெருங்கிய நண்பரான அரவிந்த். அவர் 2014இல் ஹார்ட் அட்டாக்கால் இறந்து போனார்.

நம்முடைய சொந்த இசை லேபிள் துவங்கும்போது அதன் முதல் பாடலை அரவிந்துக்கு சமர்ப்பிக்க வேண்டும், அதன் பெயரும் அரவிந்த் என்றுதான் இருக்க வேண்டும் என முடிவு செய்தேன். அதுதான் இந்த 'அரவிந்த்’ பாடல். இது தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான மற்றும் இசைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்.

Anirudh
AnirudhAravind

சென்னை ரசிகர்களின் அன்பு, எனர்ஜி மற்றும் உற்சாகத்திற்கு ஈடு இணையில்லை என்றும், இந்த நகரம் எப்போதும் எனக்கு ஸ்பெஷல். மேலும், இந்தச் சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்த பிராண்ட் அவதார், எக்ஸ்பிரஸ் அவென்யூ, அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கும் நன்றி" என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com