Samuthirakani, Andrea, Kishore
Samuthirakani, Andrea, KishoreArasan

அரசனில் குணா, செந்தில், சந்திரா... சமுத்திரக்கனி தகவல்! | Arasan | Samuthirakani | Vetrimaaran

நான் இதில் இருக்கிறேன் என்று வெற்றிமாறன் என்னிடம் கூறினார். அரசனில் ஒரு மேஜிக் நடக்கும், அப்படியான ஸ்கிரிப்ட் தான் அது.
Published on

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, கிஷோர், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் எனப் பலரும் நடித்து 2018ல் வெளியான படம் `வடசென்னை'. இப்படத்துக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. இதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் எனப் பல வருடங்களாக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதற்கு ஓரளவு ஆறுதல் தரும் விதமாக, வடசென்னை உலகிலேயே நிகழும் வேறொரு கதையாக சிம்பு நடிக்கும்  `அரசன்' படத்தை உருவாக்கி வருகிறார் வெற்றிமாறன்.

இந்தப் படம் பற்றி சமீபத்திய பேட்டியில் சமுத்திரக்கனியிடம் கேட்கப்பட "குணா (சமுத்திரக்கனி), செந்தில் (கிஷோர்), சந்திரா (ஆண்ட்ரியா ஜெரேமியா) இவர்கள் எல்லோரும் அரசனின் ஒரு பகுதியாக உள்ளனர். படத்தில் சிலம்பரசன் மற்றும் தனுஷ் மோதுவார்களா என்று எனக்குத் தெரியவில்லை. நான் இதில் இருக்கிறேன் என்று வெற்றிமாறன் என்னிடம் கூறினார். அரசனில் ஒரு மேஜிக் நடக்கும், அப்படியான ஸ்கிரிப்ட் தான் அது. வெற்றிமாறன் கதையைச் சொல்லும் ஒவ்வொரு முறையும், முற்றிலும் வேறு ஒன்றாய் சொல்வார். அரசனுக்கு உழைக்கும் உழைப்பு மிகப்பெரியது. கண்டிப்பாக அது பெரிய படைப்பாக வரும். இதற்கு மேல் நான் ஏதாவது சொன்னால், அது படத்தில் வராமல் போக வாய்ப்பு இருக்கிறது." என்றார்.

Samuthirakani, Andrea, Kishore
"என்னை அம்மாவோட ஒப்பிடுவார்கள் எனத் தெரியும்!" - அவந்திகா சுந்தர் | Avantika Sundar | Kushboo

அரசன் படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடந்து வந்த நிலையில், அடுத்த வாரம் முதல் சென்னையில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. 1980, 92, 95 என மூன்று வெவ்வேறு காலகட்ட தோற்றங்களில் சிம்பு இப்படத்தில் நடிக்க உள்ளார் எனவும், மதுரையை சேர்ந்த ஒரு கபடி வீரர், எப்படி கேங்க்ஸ்டர் ஆனார் என்பதும் தான் படத்தின் கதைக்களம் எனவும் சொல்லப்படுகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com