Avantika Sundar
Avantika SundarAarambham

"என்னை அம்மாவோட ஒப்பிடுவார்கள் எனத் தெரியும்!" - அவந்திகா சுந்தர் | Avantika Sundar | Kushboo

நான் சினிமாவில் நடிப்பது பற்றி சொன்னதும், இது சாதாரண விஷயம் இல்லை, பார்த்துக்கோன்னு சொல்லி, சப்போர்ட் பண்ணினாங்க என் குடும்பம். அதற்குப் பிறகு உடம்பை ட்ரிம் ஆக்கி, சினிமாவை சீரியஸாக எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்.
Published on

தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் பல படங்களில் நடித்தவர் இயக்குநர் சுந்தர் சி-யை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பத்திக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள்.  இவர்களில் இளைய மகளான ஆனந்திதா மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். அவரின் `பொன்னியின் செல்வன்', `பொன்னியின் செல்வன் 2' மற்றும் `தக் லைஃப்' ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.

மூத்த மகளான அவந்திகா தற்போது சினிமாவில் தனது பயணத்தை சமீபத்தில்  துவங்கியுள்ளார். அவரது முதல் மலையாளப் படமான 'ஆரம்பம்' படத்தை இயக்குநர் சுஜேஷ் இயக்குகிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இப்படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் துவங்கியது. இதில் சரிதா, இந்திரன்ஸ், கலாபவன் சாஜோன் உள்ளிட்டோர் பலர் நடிக்கின்றனர். இதோடு தமிழில் சுந்தர் சி தயாரிப்பில் உருவாகும் 'டபுள் ஆக்குபன்ஸி' என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

Avantika Sundar
"மீண்டும் ஒருவரை நம்புவது சாத்தியமே இல்லை என நினைத்தேன்!" - சமந்தா | Samantha

இவர் சினிமாவில் அறிமுகமாவது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் "நான் சினிமாவில் நடிப்பது பற்றி சொன்னதும், இது சாதாரண விஷயம் இல்லை, பார்த்துக்கோன்னு சொல்லி, சப்போர்ட் பண்ணினாங்க என் குடும்பம். அதற்குப் பிறகு உடம்பை ட்ரிம் ஆக்கி, சினிமாவை சீரியஸாக எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன். என்னை அம்மாவோட உடனடியாக ஒப்பிடுவார்கள். அம்மாவுக்கு கிடைத்த மாதிரி வேடங்கள் கிடைக்கணும். அதுக்கு அவங்க கொடுத்த உழைப்பு, அக்கறை எல்லாம் எனக்கும் அமையணும். அதை நானும் செய்ய முடியுமா என பார்க்கலாம். இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கிறது. அதனால் என் உழைப்பும் சேர்ந்து சினிமாவில் அம்மா மாதிரி ஒரு இடத்திற்கு வர முடியும் என நினைக்கிறேன். என்னை முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள். எந்த பிரஷரும் அவர்களிடம் இருந்து எனக்கு வரவிலை. இன்னும் நல்ல கதைகள் கேட்கிறேன். மக்களுக்கு பிடித்த ஒரு கதாநாயகியாக நிச்சயம் இருப்பேன். அதற்காக தீவிரமாக இறங்கிவிட்டேன்" என்று கூறியுள்ளார் அவந்திகா சுந்தர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com